யோகி!

யோகா என்றால் இணைதல் அல்லது ஒன்றுதல். படைப்பாகிய உயிர், படைத்தவன் எனப்படும் படைப்பின் மூலத்துடன் இணைவது அல்லது ஒன்றிவிடுவதே யோகா.
.
யோகத்தில் இருத்தல், அதாவது, இருமை நிலையைக் கடந்து, ஒருமை அடைந்து, அந்நிலையில் நிலைத்திருத்தல் என்பது ஒரு சாதகரின் நோக்கமாக இருக்குமெனில், புறத்தே வெளிப்படுத்தும் தனது குணநலன் [அ] குணாதிசயங்கள் மற்றும் அகத்தே ஒளித்து வைத்திருக்கும் தனிப்பட்ட மனிதனின் தன்மை ஆகிய இருவேறு நிலைகளை ஒருமைப்படுத்துதல் என்பது குறிப்பிடத்தக்க முதற்படியாகும். ஏனெனில், இவை இரண்டும் பெரும்பாலான மனிதர்களுக்குச் சீரின்றி அமைந்துள்ளது.
.
வெளிப்படையான குணநலன் என்பது வேறொருவரின் நகைப்புக்குரிய பிரதியைப் போன்ற முகமூடியாகவும், உள்ளே ஒளிந்திருக்கும் தன்மை ஒருபோதும் உண்மையை எதிர்கொள்ளத் திராணியற்ற கோழையாகவும் இருக்கையில், எத்தனை விதமான யோக சாதனைகளைப் பயின்றாலும், அவை பற்றி விலாவாரியாகப் பேசினாலும், அல்லது பயிற்சியே செய்தாலும் கூட, அத்தகைய மனிதர் போகியாகவோ, ரோகியாகவோதான் இருக்கமுடியுமே தவிர, யோகியாக ஆவதென்பது சாத்தியமில்லை – இப்பிறவி முடிவதற்குள்!

~ஸ்வாமி | @PrakashSwamy

மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #99

அருட்குறள் ~ ஞானப்பால் #99
கேளாத ஒலிகேட்டுக் காணாத ஒளிகாண
மீளாத பிணிபோய் விடும்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
கேளாத ஒலி என்பது படைத்தலின் மூலாதார ஒலியான பிரணவம் ~ ஓங்காரம் (ஓம் / அஉம்). இது செவிகள் மூலம் கேட்கப்படும் புற உலகின் ஒலியல்ல.

.

காணாத ஒளி என்பது படைப்பிலுள்ள உயிர்களின் உள்ளே ஒளிரும் படைத்தவனாகிய உயிர்சக்தி. இது விழிகள் மூலம் காணப்படும் புற உலகின் ஒளியல்ல.
.
குருவருளால் ஆன்மீக சாதனைகளை சிரத்தையுடன் செய்துவருவோர், ஒரு நிலையில் கேளாத ஒலியை, அதாவது பிரணவத்தைத் தம்முள் கேட்பர். நிர்குண பிரம்மமாகிய படைத்தவனை அருட்பிரகாச ஒளி வடிவாகத் தம்முள் காண்பர். இந்நிலையை அடைந்தோர், மீளாப் பிணி எனப்படும் பிறவிப்பிணியிலிருந்து முற்றிலும் விடுபட்டு முக்தி எனும் வீடுபேற்றை அடைவர்.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
The unheard or soundless sound is PraNava, i.e. the primordial sound of creation, aka AUM. This sound cannot be heard externally through the ears.

.

The unseen light is the Creator who glows within every single being in creation as the source of life or life energy. This light cannot be seen externally through the eyes.

.

When a seeker on the spiritual path keeps performing the sadhana (spiritual practices) diligently, with Guru’s Grace, s/he will eventually hear the soundless sound, aka AUM and see the Creator known as Nirghuna Brahmam as radiant light, within oneself. Such beings will be ridden of the inescapable ailment, i.e. the repetitive birth-death lifecycle and attain mukti, aka ultimate liberation.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #70

அருட்குறள் ~ ஞானப்பால் #70
நானொன் றெனும்பிழை ஞானம் விடுத்தெதும்

நானென் றிருத்தலுயிர் மெய்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
நான் இன்னார், இத்தகைய பெருமை படைத்தவன், இவ்வளவு செல்வத்தை உடையவன் என்றெல்லாம் பற்பல புற அடையாளங்கள் மூலமாகத் தன்னைப் படைப்பிலுள்ள ஒரு தனிப்பிறவியாக எண்ணுவது பிழையான அறிவாகும். இது பிழைப்பை நோக்கமாகக் கொண்ட கல்வி மூலம் கற்ற மற்றும் சமூக அனுபவங்கள் மூலம் பெற்ற காரண அறிவால் விளையும் அறியாமை.

.

மனிதராகப் பிறந்த பெரும் பேருடைய ஒருவர், இந்த நான் தனிப்பட்ட ஒருவன் என்ற மடமையிலிருந்து விடுபட்டவுடன், தானே படைப்பிலுள்ள அனைத்தும் என்று அனுபவ பூர்வமாக உணர்தலே உயிர்மெய் [அ] அல்லது மெய்ஞானம் அறிதல் ஆகும். “அஹம் பிரம்மாஸ்மி” என உணர்ந்து அப்பேரானந்த நிலையில் நிலைத்திருப்பதே ஞானோதயம் ஆகும்.
.
ஞானோதயம் அடைந்த நிலையில், படைத்தவன் வேறு, படைப்பு வேறு என்ற இருமை மறைந்து, யாதும் ஒன்றே என்ற ஒருமை, வெறும் அறிவு சார்ந்த புரிதலாக இல்லாமல், நேரடியான அனுபவமாக இருக்கும் என்பதே, ஞானோதயம் அடைந்த குருமார்கள் அனைவரும், தத்தமது பாணியில் உரைத்த உண்மையாகும். இந்நிலை மனிதர்கள் அனைவருக்கும் சாத்தியமே. இந்நிலையை அடையும் வழியே ஆன்மீகம். இதனை இப்பிறவியிலேயே அடைய விழைவோரே ஆன்மீக ஆர்வலர்கள் மற்றும் சாதகர்கள்.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
I’m this person, who is so famous with so much wealth… all such beliefs about one’s individual identity caused by external influences is a reflection of one’s faulty knowledge. Such ignorance is caused by education that’s focused on survival and limited intellect shaped by social experience.
.
When one who is blessed to be born as a human being, gets disentangled from this identity madness, i.e. lets go of ego, one will realise that everything in existence is alive with the same life force, which remains within oneself as well. This realisation of Truth (about Creator, creation, existence, et al) is known as enlightenment, which is when one experientially knows and remains in the blissful state of “Aham BrahmAsmi.”
.
In the self-realised aka enlightened state, the duality of self being different from the divine vanishes and the realisation that everything is one happens not as an intellectual comprehension but as direct perception and experience of reality. This is the singular truth stated by all Realised Masters, expressed in their own way, based on their path and practices (to attain) and environment (society, belief systems of that age, et al). Self-realisation is a possibility for every human being. Spirituality is the path to attain self-realisation. Seekers are those beings who aspire to attain self-realisation within this lifetime itself.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #36

அருட்குறள் ~ ஞானப்பால் #36
இசைக்காதார சுதியின்றே லிரைச்சல் மெய்யறியும்
விசைக்காதார கதியொன்றே அருள்.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~
இனிமையான இசைக்கு ஆதாரமாக விளங்குவது சுருதி* (ஸ்ருதி) ஆகும். சுருதி பேதமுள்ள இசை அபஸ்வரமான இரைச்சலாகவே இருக்கும்.
.
அதுபோல, ஆன்மீக சாதகரின் உயிர்மெய் அறியும் முயற்சிக்கு ஆதாரமாக இருப்பது அருள் மட்டுமே. அருள் சாராத ஆன்மீக முயற்சிகள் பயனற்றவை.

.

*வேதங்களையும் ஸ்ருதி என்று வகைப்படுத்துவர். அதன் பொருள் “ஒலித்த (அ) கேட்கப்பட்ட ஒலி” என்பதாகும்.
.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

Sruthi* (pitch or gradation / interval of pitch) is the basis of music. Music that’s out of tune with sruthi will be just dissonant noise (apaswaram).

.

Similarly, the basis of the effort required for the spiritual pursuit of a seeker is Grace. Even an enormous amount of effort spent on realising the Truth will be ineffective without Grace.
.
*The Vedas too are classified as ‘Shruthi,’ meaning ‘sound that was heard.’
.
~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #36

அருட்குறள் ~ ஞானப்பால் #36
இசைக்காதார சுதியின்றே லிரைச்சல் மெய்யறியும்
விசைக்காதார கதியொன்றே அருள்.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~
இனிமையான இசைக்கு ஆதாரமாக விளங்குவது சுருதி* (ஸ்ருதி) ஆகும். சுருதி பேதமுள்ள இசை அபஸ்வரமான இரைச்சலாகவே இருக்கும்.
.
அதுபோல, ஆன்மீக சாதகரின் உயிர்மெய் அறியும் முயற்சிக்கு ஆதாரமாக இருப்பது அருள் மட்டுமே. அருள் சாராத ஆன்மீக முயற்சிகள் பயனற்றவை.

.

*வேதங்களையும் ஸ்ருதி என்று வகைப்படுத்துவர். அதன் பொருள் “ஒலித்த (அ) கேட்கப்பட்ட ஒலி” என்பதாகும்.
.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

Sruthi* (pitch or gradation / interval of pitch) is the basis of music. Music that’s out of tune with sruthi will be just dissonant noise (apaswaram).

.

Similarly, the basis of the effort required for the spiritual pursuit of a seeker is Grace. Even an enormous amount of effort spent on realising the Truth will be ineffective without Grace.
.
*The Vedas too are classified as ‘Shruthi,’ meaning ‘sound that was heard.’
.
~Swamy | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑