இன்றைய தரிசனம் ~ மன்னிப்பு எனும் மடமை!

இன்றைய தரிசனம் ~ மன்னிப்பு எனும் மடமை!

இன்றைய தரிசனம் ~ மன்னிப்பு எனும் மடமை 樂
~~~~~~~~~~~~~~~

மன்னித்தல் என்பது ஒரு உயர்ந்த பண்பாகக் கருதப்படுகிறது. தவறான எண்ணம் அல்லது செயலுக்கு ஒருவர் மன்னிப்புக் கோருவதும், வேறொருவர் அதற்கு மன்னிப்பு வழங்குவதும், பலராலும் சிறந்த செயல்களாகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், எடுத்துக்காட்டாகவும் கொள்ளப்படுகின்றது. “To err is human, to forgive is divine” என்ற இந்த glorified lie  நகைப்புக்குரியது.

கொலைக்குற்றம் புரிந்த ஒருவன், சட்டப்படி தண்டிக்கப்பட்டாலும், விடுவிக்கப்பட்டாலும், அச்செயல் புரிந்த கணமே, அவனது கர்மவினையின் சுமை கூடிவிடும். எந்த ஒரு செயலுக்கும் எவ்வாறு பின்விளைவு உண்டோ, அவ்வாறு கொலை எனும் கொடுஞ்செயலுக்கும் நிச்சயமாக ஒரு விளைவை அம்மனிதன் அனுபவித்தே  தீரவேண்டும். இப்பிறவியில் இல்லாவிட்டாலும், வேறு ஏதோ ஒரு பிறவியில் அவ்விளைவு அவ்வுயிரின் வாழ்வில் செயல்படும். உயிர்க்கொலையை – மனிதரல்லாத உயிர்களையும் சேர்த்து – ஒரு தொழிலாகக் கொள்வோரும், அவ்வுயிர்களின் வேதனைக்கும், வலிக்கும், தவிப்பிற்கும் காரணமாயிருந்த செயலுக்கான பலனை அனுபவித்தே தீரவேண்டும்.

சில மதங்களில், தவறு செய்வோருக்குப் பாவமன்னிப்பு வழங்குதல் என்ற சடங்கு நிகழ்கின்றது. தன்னுடைய தவறை ஒருவர் மற்றொருவரிடம் பகிர்வதன் மூலம், உள்ளத்தின் ஆற்றாமையை ஓரளவிற்குத் தணிக்கும் உளவியல் விளைவைத் தவிர, இதனால் கர்மவினையின் சுமையைக் குறைப்பதற்குப் பயன் எதுவுமில்லை. அவ்வாறு பாவமன்னிப்பு வழங்கும் பொறுப்பில் உள்ள பலரே, பாலியல் வன்முறை போன்ற கொடுமைகளைப் புரிந்தது பற்றிய கொடூரமான தகவல்கள் வெளிவருகையில், அச்சடங்கு  மேலும் ஏளனத்திற்குரியதாகின்றது.

எந்தச் சமூகத்திலும், மன்னிப்பு வேண்டுபவன் தனது பெருமிதத்தை ஒடுக்கிக்கொண்டே அதைக் கேட்கவேண்டியுள்ளது. “நான் எப்பேர்ப்பட்ட ஆள் தெரியுமா,” என்ற ஆணவத்தை விட்டுத், தனது நிலையிலிருந்து கீழிறங்கி வந்து மன்னிப்புக் கேட்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனித சமுதாயத்தில் நிலவுகின்றது. ஆனால், மன்னிப்பு வழங்குபவருக்கு, அவரது பதவி வழங்கும் அதிகாரம் மட்டுமே போதுமானது என்ற வரைமுறை விந்தையானது. தனது சொல்லாலோ, செயலாலோ, பதவியின் அதிகாரம் வழங்கும் மமதையில் அம்மனிதன் பிறரைத் துன்புறுத்தும் தன்மை கொண்டிருந்தால்கூட, பதவி என்ற கவசம் அவனைக் காப்பது எவ்வளவு பெரிய கொடுமை.

சட்டம் அல்லது மதத்திற்கு அப்பாற்பட்டும் மன்னிப்பு வழங்குதல் நிகழ்கின்றது. இரு தனி மனிதர்களுக்கிடையில், குடும்பத்தில், அலுவலகத்தில், வீதியில் என்று பல இடங்களிலும், “I am sorry,” ஓயாது கேட்கும் ஒலியாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அறிந்தோ அறியாமலோ யாரோ ஒருவர் செய்த செயலை நான் மன்னிக்கிறேன் என்பது எவ்வளவு ஆணவத்திற்குரிய செயல் என்று யாரும் சிந்திப்பதே இல்லை. மன்னிப்பு வழங்குதல் ஒரு மகத்தான செயலாக எல்லோராலும் உறுதியாக நம்பப்படுவதால், நம்பிக்கை சார்ந்த செயல்கள் அனைத்திலும் மாறாது காணப்படும் மடமையின் மைதோய்த்த அச்சு, மன்னிப்பிலும் தனது கறையை அழிக்கமுடியாதவாறு பதித்து விடுகின்றது. நான் வேறொருவனை மன்னிக்கிறேன் என்ற எண்ணமே ஆணவ நாகத்தைப் படமெடுத்து ஆடவைக்கும். அகத்தில் அகந்தை நச்சு ஏறுவதை அறியாது, ஆணவச் செருக்கில் பிறரது தவறை மன்னித்துப் பெருமை தேடுபவர்கள், “கடமையைச் செய், பலனை எதிர்பாராதே,” என்ற கிருஷ்ண பரமாத்மாவின் அறவுரை கேட்டும்கூடத் திருந்த வாய்ப்பில்லை.

தனது செயல்கள் அனைத்திற்கும் தானே பொறுப்பு என்ற உணர்வு மனிதர்களிடம் ஏற்படாதவரை, தவறான செயல்கள் நடப்பதை ஒருபோதும் தவிர்க்கமுடியாது. எந்த ஒரு செயலைப் (சரியோ, தவறோ) புரிபவரும் , அந்தச் செயலுக்கான பலனை அல்லது அச்செயலின் விளைவை என்றாவது சந்தித்தே ஆகவேண்டும் என்ற தெளிவை அடையாதவரை, தவறுகள் திருத்தப்பட அல்லது குற்றத்திலிருந்து தப்பிக்க, மன்னிப்பு போன்ற குறுக்கு வழிகள் பயன்படுத்தப்படுவதையும் யாராலும் தடுக்கமுடியாது. கண்மூடித்தனமான நம்பிக்கைகளில் மூழ்கி, உண்மையை உணர்ந்தறியும் ஆர்வமற்று, பிழைப்பே வாழ்வு என்ற தவறான புரிதலுடன், வெற்றி மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்வோர் நிறைந்த இன்றையப் பொருளாதாரச் சமுதாயத்தைப் பீடித்திருக்கும் பிணிகளில் தலையாயது “மன்னிப்பு எனும் மடமை!”

~ஸ்வாமி | @PrakashSwamy

யோகி!

யோகா என்றால் இணைதல் அல்லது ஒன்றுதல். படைப்பாகிய உயிர், படைத்தவன் எனப்படும் படைப்பின் மூலத்துடன் இணைவது அல்லது ஒன்றிவிடுவதே யோகா.
.
யோகத்தில் இருத்தல், அதாவது, இருமை நிலையைக் கடந்து, ஒருமை அடைந்து, அந்நிலையில் நிலைத்திருத்தல் என்பது ஒரு சாதகரின் நோக்கமாக இருக்குமெனில், புறத்தே வெளிப்படுத்தும் தனது குணநலன் [அ] குணாதிசயங்கள் மற்றும் அகத்தே ஒளித்து வைத்திருக்கும் தனிப்பட்ட மனிதனின் தன்மை ஆகிய இருவேறு நிலைகளை ஒருமைப்படுத்துதல் என்பது குறிப்பிடத்தக்க முதற்படியாகும். ஏனெனில், இவை இரண்டும் பெரும்பாலான மனிதர்களுக்குச் சீரின்றி அமைந்துள்ளது.
.
வெளிப்படையான குணநலன் என்பது வேறொருவரின் நகைப்புக்குரிய பிரதியைப் போன்ற முகமூடியாகவும், உள்ளே ஒளிந்திருக்கும் தன்மை ஒருபோதும் உண்மையை எதிர்கொள்ளத் திராணியற்ற கோழையாகவும் இருக்கையில், எத்தனை விதமான யோக சாதனைகளைப் பயின்றாலும், அவை பற்றி விலாவாரியாகப் பேசினாலும், அல்லது பயிற்சியே செய்தாலும் கூட, அத்தகைய மனிதர் போகியாகவோ, ரோகியாகவோதான் இருக்கமுடியுமே தவிர, யோகியாக ஆவதென்பது சாத்தியமில்லை – இப்பிறவி முடிவதற்குள்!

~ஸ்வாமி | @PrakashSwamy

மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #77

அருட்குறள் ~ ஞானப்பால் #77
பிறர்புகழ வேண்டுவர் பிழைப்பவர் வினைகூட்டும்
நிறம்விடுவர் மெய்காண் பவர்.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
பிழைப்பு சார்ந்த வாழ்வில் ஊறியுள்ளோர், பிறர் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காகப் பல செயல்களைப் புரிவர். இதன் காரணமாக, அவர்தம் வாழ்நாளில் பெரும்பாலான காலம் பிறர் எதிர்பார்க்கும் [அ] விரும்பும் செயல்களைப் புரிவதிலேயே கழிந்துவிடும்.

.

மனிதர்களின் இயல்பானது எதையும் ஒப்பிட்டுப் பின் விருப்பு / வெறுப்பு என்ற இருமையின் வெளிப்பாடாகத் தமது சொல் மற்றும் செயல்களை அமைத்துக் கொள்வதாகும். எனவே, ஒருவர் சிறப்பான செயல்களைப் புரிந்தாலும் கூட, பிறர் அவரைப் புகழ்வதென்பது, அவர்களது விருப்பு, வெறுப்பைப் பொறுத்தே அமையும் என்பதால், பிறரின் புகழ்ச்சிக்காகச் செயல் புரிவது பயனற்றது.

.

உயிர்மெய் பற்றிய அறியாமை காரணமாக விளையும் விருப்பு/வெறுப்பு, நல்லது/தீயது போன்ற இருமை நிலை, நிறமற்ற, அதாவது இயல்பாக வேறுபாடுகள் எதுவுமற்ற ஒன்றிற்கு, நிறம்சேர்க்கும் தன்மையுடையது. இதனையே மாயை என்றும் கூறுவர். இத்தகைய மாயச் சுழலில் சிக்கியிருக்கையில் செய்யும் செயல்கள், ஒருவரது கர்மவினையின் சுமையை மேலும் கூட்டிவிடும். ஆகையால், உயிர்மெய் அறியும் விருப்பமுடைய ஆன்மீக ஆர்வலர்கள், நிறமற்ற வகையில், அதாவது பாகுபாடு மற்றும் வேறுபாடுகள் இல்லாதவாறு தமது செயல்களைப் புரிய வேண்டும்.
.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
Those who are stuck in the survival focused existence, will do a lot of things to earn praise from others. Due to this, most of their lifetime will end up being spent in activities to please / impress others, by doing what others expect or like.
.
It’s human nature to organise their words and deeds based on comparison of things (and beings) and their likes/dislikes, which is a reflection of the duality. Hence, even if someone does something wonderful, the praise from others will be dependent on the likes and dislikes of others, and not based on the quality and outcome of the action itself. That’s why, it’s quite pointless to do things to earn praise from others.

.

The duality of good/bad, likes/dislikes, etc. arise from the ignorance of colouring everything in existence, with one’s own limited intellect and prejudices. In reality, every creation is colourless, i.e. as they were intended to be in creation and the attribution of any colour is done by others who perceive it through their own coloured mind. This is also known as mAya (unreal).
.
Any kind of action performed while being stuck in the spiral of mAya will end up increasing the already bulky load of one’s karma (accumulated actions of the past and the present). That’s why, seeker of truth, i.e. seekers on the spiritual path, should perform all their actions without prejudice or bias.
.
~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #74

அருட்குறள் ~ ஞானப்பால் #74
அரிந்தெது மறிந்தவ ரறிஞரிங் கறிவரோ
அறிந்திட லரிதரன் னரி.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
ஐம்புலன்களால் அறியக்கூடிய எதையும், பகுத்து அல்லது பிரித்துப் பார்த்து, கற்ற மற்றும் பெற்ற அறிவால் புரிந்துகொள்ளும் திறனுடையோர், பிழைப்பு சார்ந்த உலகில் அறிஞர் என்று அடையாளம் காணப்படுகிறார்கள். அவர்களில் சிலர் புகழ் மற்றும் செல்வாக்கு (மற்றும் செல்வம்) உடையவர்களாகவும் விளங்குகிறார்கள்.
.
ஆனால் இறைவன் அல்லது இறைத்தன்மை என்பது புலன்களால் அறியப்படும் காரண அறிவிற்கு அப்பாற்பட்டது. படைத்தவனைப் படைப்பு (மனிதன்) அறிய வேண்டுமெனில், பகுத்தறியும் சிற்றறிவைக் கடந்து செல்லும் துணிவும், ஆர்வமும் வேண்டும்.

.

பிழைப்பு சார்ந்த வாழ்வில் வெற்றி பெறுவதை வாழ்வின் நோக்கமாகக் கொண்டோருக்கு – குறிப்பாக ‘அறிஞர்’களுக்கும், அவர்களை பிரமிப்போடு போற்றுவோருக்கும் – கற்ற அறிவின் எல்லையைக் கடந்து சென்று மெய்ஞானம் தேடும் துணிவு ஏற்பட வாய்ப்பில்லை.
ஆகையால்தான், அரன் (ஹரன் – சிவபெருமான்), அரி (ஹரி – மஹாவிஷ்ணு) என்று பல்வேறு உருவங்களில் அருளக்கூடிய உரு மற்றும் குணங்களற்ற பரப்பிரம்மமாகிய இறைவனை, பகுத்தறிவைக் கடக்க இயலாத அறிஞர் என்ற அடையாளத்தில் சிறைப்பட்டுள்ள மனிதர்களால் ஒருபோதும் அறிந்துணர முடியாது.

.

கல்வி மற்றும் காரண அறிவு பிழைப்பிற்குப் பயனளிக்கும். ஆனால், உயிர்மெய் அறிதல் மற்றும் முக்தி அடைதலுக்குக் கற்றறிவால் பயனேதுமில்லை. இதனால்தான், முறையான கல்வி பயிலாத பலர் இந்தத் தொன்மையான கலாசாரத்தில் ஞானோதயம் அடைந்த ஞானிகள் மற்றும் குருமார்களாக இருந்து வந்துள்ளனர். இன்றும் இருக்கின்றனர்.
.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~

Those who are skilled in dissecting and differentiating everything that’s known through the sense organs in existence, for the purpose of comprehension, are considered wise / scholars, in the survival focused world. Some of those scholars also gain fame, wealth and influence.

.

But God or Divinity is beyond the limits of knowledge that can be acquired through sensory perception and intellectual comprehension. So, if the creation (human being) has to know the Creator, then one must not only have a keen interest to know the Truth (about Creator, creation, existence, et al.) but also be brave enough to let go of the acquired knowledge.

.

It’s practically impossible for those who are focused on being successful in the survival centric world – especially the so-called ‘scholars’ and their ardent admirers – to confidently let go of the acquired knowledge – theoretical and practical – in order to know “Life, the way it is,” i.e. Reality. That’s why, it’s simply not possible for those who are stuck with the identity of ‘scholars’ to experience / know the formless, attributeless divine known as Parabrahmam, that showers its grace through many forms such as Haran (Lord ShivA) and Hari (Lord MahAVishNu).

.

Education and intellect are useful for survival. But neither is really useful to realise the Truth / know Reality. This is why, there have been many Realised Beings and Master’s (Guru) in this culture, who weren’t even formally educated. Many are still around!

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #72

அருட்குறள் ~ ஞானப்பால் #72
ஆறாவதைக் கொண்டைந்து கடந்தெதுவு முள்ளபடி

மாறாததைக் காண்பதுயிர் மெய்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
பிழைப்பு சார்ந்த வாழ்க்கையில், ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையெல்லாம் பகுத்தறியவே ஆறாவது புலனாகிய புத்தி [அ] அறிவு பயன்படுகின்றது.
.
ஐம்புலன்களின் புறம் நோக்கிய உணர்தலைக் கடந்து, அதே அறிவைப் பயன்படுத்தி, வாழ்வை உள்ளது உள்ளபடி, பகுத்தறிய முயலாமல், நேரடி அனுபவமாகத் தன்னுள்ளே உணர்வது, உயிர்மெய் அறிதல் [அ] ஞானோதயம் அடைதலாகும். இதுவே ‘ஞான யோகம்’ என்ற ஆன்மீகப் வழியாகும்.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
In the survival focused existence, the mind or intellect, aka sixth sense, is useful only to dissect and comprehend whatever is experienced through the five senses.

.

The same intellect can go beyond the confines of external focused sense-based perception, and used to observe and experience ‘Life, the way it is,” i.e. perceive reality, as it is, without any intellectual interpretation, within oneself. Thus, a seeker can attain self-realisation, using the intellect or mind itself as a tool. This is the path of GnAna yoga.

.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #64

அருட்குறள் ~ ஞானப்பால் #64
உண்டகை கழுவுதல் போலன்று கோயிலுள்

கண்டபின் னமர்காலம் நீட்டு.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
கோயிலில் இறைவனைத் தரிசித்த பின்னர், ஓரிரு கணங்கள் எங்காவது அமர்ந்து எழுவது என்பது, உணவை உண்டு முடித்த பின்னர் விரைவாகக் கைகழுவுவதற்கு ஒப்பாகும்.
.

முறையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருக்கோயில்கள், வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல. அவை உயிரோட்டமுள்ள சக்தி மையங்கள். எனவேதான், திருக்குளத்தில் குளிப்பது தொடங்கி, அபிஷேகம், அலங்காரம், ஆராதனை ஆகியவற்றில் பங்குபெற்று, சக்தி வடிவமான இறைவனின் திருமேனியைத் தீண்டியதன் மூலம் சக்தியூட்டப்பட்ட மலர்கள், திருநீறு/குங்குமம்/சந்தனம் மற்றும் தீர்த்தத்தைப் பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்து, துவஜஸ்தம்பத்தின் முன்பு சாஷ்டாங்கமாக நமஸ்கரிப்பது வரை, கோயில் வழிபாட்டு முறையானது, அடியவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தை உயிரூட்டப்பட்ட ஒரு சக்தியின்* இருப்பிடத்தில் தினசரி செலவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

.
மனிதர்கள் எதையும் ஏதோ ஒரு காரணத்தால் பரபரப்பாகவே செய்யும் பிழைப்பு சார்ந்த இன்றைய வாழ்க்கை முறையில், கோயில் வழிபாடும் அவசரகதியில் நிகழ்வதால், அதனால் இலவசமாகக் கிடைக்கக்கூடிய, உயிர் சக்திக்கு ஊட்டமளித்தல் (தினசரி!) நிகழ வாய்ப்பில்லாது போய்விட்டது. ஆகையால், திருக்கோயில்கள் மற்றும் ஜீவ சமாதி போன்ற சக்தி மையங்களுக்குச் செல்லும்பொழுது, அவ்விடத்தில் செலவிடும் நேரத்தை நீட்டிப்பது, பல நிலைகளில் மிகுந்த பயன் தரும்.

.

*ஒவ்வொரு இறை வடிவத்திற்கும், வடிவ அமைப்பு மற்றும் வழிபாட்டு முறைகள், அவற்றின் சக்தி நிலையைச் சார்ந்து மாறுபடலாம். ஆனால் அவற்றின் சக்தியூட்டும் தன்மை மாறுபடாது என்பதால், எந்தத் திருக்கோயிலில் எவ்வகை இறை உருவத்தை வழிபடுகிறோம் என்பது முக்கியமானதல்ல. அவ்விடத்திலுள்ள சக்தியைப் பெறுவதற்கு நாம் திறந்த நிலையில் இருப்பதே முக்கியம்.
~ஸ்வாமி | @PrakashSwamy

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
Resting somewhere in the temple just for a few moments, after having darshan of the deity, is akin to washing hands in a hurry after consumption of a meal.

.

Temples that have been properly consecrated (prathishA) aren’t mere places of worship, but tremendous spaces of active energy. That’s why, starting with a dip in the temple pond, to having darshan of AbhishEkham, AlankAram, ArAdhanA and offering ArpaNam, to receiving the flowers, vibhUthi/kumkum/sandal and theertham that’ve touched the consecrated form of deity as prasAdham, to performing circumambulation of the temple prahAram, to doing sAshtAnga namaskAram in front of the dwajasthambham, the process of worship at temples is designed to ensure that the devotees spend a specific amount of time in the energised spaces, on a daily basis.

.

In the present times, when living is focused primarily on survival, Humans do everything in a hurry, for whatever reason. Since temple worship also happens in a tearing hurry, the recharging of one’s life energy, which happens free-of-charge at temples, isn’t happening effectively for any. So, whenever one visits consecrated spaces* of energy such as Temples and Jeeva SamAdhis, it is important to spend some quality time at the space itself, and be receptive to the divine energy that’s active in such spaces.
.
*The form and format of worship may vary, depending on the nature of the deity. But since their purpose of energising the beings in their presence remain the same, which form of the divine one worships and the type of temple isn’t really important. What’s important is to remain receptive to the energy in such spaces.
~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #51

அருட்குறள் ~ ஞானப்பால் #51
கல்லாதார் நடுநின்ற கற்றார்போ லுயிர்மெய்காண்
நல்லார்தம் பிழைப்பின் நிலை.
குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~

பிழைப்பு சார்ந்த உலகில் வாழும், உயிர்மெய் கண்டுணர்ந்த [அ] அதற்கான தேடலில் உள்ள ஆன்மீக அன்பர்களின் நிலையானது, கல்வியறிவற்ற [அ] அறியாமை நிறைந்த ஒரு கூட்டத்தின் நடுவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் கல்வி, கேள்விகளில் சிறந்த அறிவாளியின் நிலையை ஒத்தது.
~ஸ்வாமி | @PrakashSwamy
.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
In this survival focused world, the situation of an enlightened being or a seeker who is on the spiritual path towards self-realisation is similar that of a scholar stuck amidst a crowd of uneducated / ignorant beings.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #25

அருட்குறள் ~ ஞானப்பால் #25
கள்ளமனம் செல்லும்வழி யலையாது புலன்மூடி

உள்ளதைநீ உள்ளபடி யுணர்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
தவறான பாதையைக் காட்டி மோசம் புரியும் கட்டுப்பாடற்ற மனம் செல்லும் வழியில் சென்று அலைந்து வாழ்க்கையை வீணடிக்காமல், ஐம்புலன்களைக்* கட்டுப்படுத்தி, வாழ்வை ‘உள்ளது உள்ளபடி’ உணர்வதற்கு ஆன்மீக சாதகர் முயல வேண்டும்.

*விழி ~ பார்த்தல்; செவி ~ கேட்டல்; நாசி ~ நுகர்தல்; நாவு ~ சுவைத்தல்; தோல் (கரங்கள் மூலம்) ~ தொடுதல்.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

Instead of roaming aimlessly along the devious ways on which the deceptive mind traverses uncontrollably and wasting precious lifetime, a seeker must learn to control the five sense organs* (and their actions) in order to perceive and experience ‘Life, the way it is.’

*Eye ~ seeing; ear ~ hearing; nostrils ~ smelling; tongue ~ tasting; skin (primarily through limbs) ~ touching.
~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #21

அருட்குறள் ~ ஞானப்பால் #21
பொருள்தேட மதிவழிபோய்ப் பொய்யுரைப்பர் துதிசெய்வர்
அருள்நாட அதுவன்று வழி.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~
சமூகத்தில் வாழும்பொருட்டு செல்வம் சேர்ப்பதற்காக மனிதர்கள் தங்களது மனம் போன போக்கில் சென்று, பொய்யுரைத்தல், பிறரைத் துதிபாடுதல் போன்ற செயல்களைப் புரிந்து பயனடைவர். இவை மூலம் அவர்கள் வெற்றிபெறக்கூடும், அதேசமயத்தில் கர்மவினையின் எடையை இச்செயல்கள் மேலும் கூட்டிவிடும்.
ஆனால் உயிர்மெய் அறிந்து, முக்தி என்ற வீடுபேற்றை அடைய விழையும் ஆன்மீக ஆர்வலர்கள், அம்முயற்சிக்குத் தேவையான அருளைப் பெறுவதற்கு, பொருள் வாழ்வின் வழிமுறைகள் உதவாது.
KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

In order to earn the wealth necessary to live in the society, humans traverse the devious ways of the mind and end up lying and praising others. This might make them successful but at the cost of adding more weight to their karma pile.
For those on the spiritual path seeking Grace, in order to realise the Truth (about Creator, creation, existence, et al) and attain mukti (ultimate liberation from the repetitive birth-death lifecycle), these methods of materialistic living are of no use.

~Swamy | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑