அருட்குறள் – ஞானப்பால் 110

அருட்குறள் – ஞானப்பால் 110

மறந்ததை யறிந்திடா மனம்விடுங் கணந்தனிலறிந்திடு வதாமுயிர் மெய். 

குறள் விளக்கம்

நான் இன்னார்‘ என்ற சமூக அடையாளங்களைக் கடந்து, ‘நான் யார்‘ என்ற உண்மையைக் காரண அறிவால் கண்டறிய இயலாது. காரண அறிவின் ஊற்றுக்கண்ணாகிய மனத்தை அடக்கும் திறன் கைவரப்பெறுவது மிக அரிது. எனவே, மனத்தை அதன்போக்கில் விட்டுவிடுவதே எளிய வழியாகும். 

அவ்வாறு ‘நான் உடல் அல்ல, நான் மனமும் அல்ல,’ என்ற தெளிவுடன், உடல் மற்றும் மனத்தின் பிடிப்பிலிருந்து ஒரு ஆன்மீக சாதகர் விடுபடும் அதே கணத்தில், தன்னுள்ளேயே உயிர்சக்தியாக ஒளிரும் இறைசக்தியை அவரால் உணர முடியும். இந்நிலையில், படைப்பு (உயிர்களாகிய நாம்) வேறு, படைத்தவன் (படைப்பின் மூலமான இறைைவன் [அ] சக்தி) வேறு என்ற காரண அறிவின் அறியாமையால் விளையும் இருமை நிலை அகன்றுவிடும். இவ்வாறு ‘அஹம் பிரம்மாஸ்மி’ (நானே பிரம்மம்) என்று தன்னை அறிதலே உயிர்மெய் அறிதல் எனும் ஞானோதயம் ஆகும்.

KuRaL explanation

It’s not easily possible for the limited intellect to let go of the ‘I’, which is made of many social identities, and realise the Truth about ‘Who am I!’ it’s also practically impossible for most humans to control or conquer the mind, from which is the origin of the intellect. The relatively easier way is to let the mind simply go about its business, i.e. not hinder or block the ceaseless flow of thoughts in any manner. 

When a seeker on the spiritual path gains the clarity of ‘I’m not the body, I’m not even the mind,‘ and distances oneself from both, in that very moment s/he can realise the divine within, glowing as the life energy. In this state of realisation, the duality of creation (beings like us) and creator (God or source of all creation) being different, which is caused by the ignorance of the limited intellect, will vanish. Realising the Truth of ‘Aham BrahmAsmi’ (I’m Brahman) thus is known as self-realisation or enlightenment.

~ஸ்வாமி | @PrakashSwamy

மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் 106

அருட்குறள் ~ ஞானப்பால் 106

கூற்றன்கொள் ளுடலன்று கூத்தாடும் மனமன்று

மாற்றமிலா ததுநீமெய் யறி.

குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~
மனிதனாகப் பிறவி எடுத்தவர்கள் கூற்றுவன் எனும் யமன், இறப்பின்போது எடுத்துக் கொள்ளும் ‘நான் இன்னார்’ என்ற அடையாளத்தை உடைய உடல் அல்ல. அதேபோன்று, எவ்விதமான கட்டுப்பாடுமின்றிக் கூத்தாடித் திரியும் மனமும் அல்ல மனிதர்கள்.

.

படைப்பு என்பது உருவாகும் முன்பும், உருவாகி இயங்கும் பொழுதும், பிரளயம் ஏற்பட்டு முழுமையாக மறைந்த பின்னும் மாறாது உள்ளது எதுவோ, படைப்பிற்கு மூலகாரணமாக உள்ள அந்த பரப்பிரம்மமே மனிதரைப் போன்று உள்ள அனைத்து விதமான படைப்பும் ஆகும். இந்த உயிர்மெய் அறிந்து முக்தி என்ற இறுதி விடுதலையை அடைவதே மனிதராகப் பிறந்ததன் பயனாகும்.

.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~
Those who are born as human beings aren’t the physical form (body) with identities that’s taken by YamA when death happens. Nor are humans the mind that frolics and roams around uncontrollably.
.
That which remains unchanged from the time before creation, when creation happened and flourishes, and when it vanishes during the praLaya, the Parabrahmam is the one that has manifested into all the beings that exist in creation, including humans. Realising this Truth (about Creator, creation, existence, et al) and attaining Mukti (the ultimate liberation from the repetitive birth-death lifecycle) is the purpose of being born as human.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #98

அருட்குறள் ~ ஞானப்பால் #98
பிணியுடல் பேயுள்ளம் வீண்கடன் மந்தையுதள்

தனியெனத் தானாட லேன்.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
பல்வேறு பிணிகளால் பீடிக்கப்பட்டு எளிதில் அழியக்கூடிய உடல்; காணாமலே அச்சம் ஏற்படுத்தும் பேயைப் போன்ற கொடிய (எண்ணங்களை ஏற்படுத்தும்) மனம்; மனிதனாகப் பிறவி எடுத்ததன் அருமையையும், பயனையும் அறியாது, கர்மவினையின் சுமையை மேலும் கூட்டும் வகையில் புரியும் வீணான செயல்கள்…

.

இத்தகைய தன்மைகளை உடைய, மந்தையிலுள்ள ஆட்டைப் போன்று ஒரேமாதிரி வாழக்கூடிய மனிதர்களுடைய அகந்தையானது, தான் ஒரு தனித்துவம் வாய்ந்த, முக்கியத்துவம் உடைய பிறவி என்ற நம்பிக்கையை அவர்களுள் ஏற்படுத்தி, ஒவ்வொருவரையும் பல பிறவிகளில் தொடர்ந்து ஆட்டுவிப்பது ஏன் என்பதே (மனிதராகப் பிறவியெடுத்தலின் மெய்யான நோக்கம் என்ன என்று) நாம் ஆராய்ந்து தெளிய வேண்டிய ஒன்றாகும்.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
Body (physical form) that’s afflicted by various diseases and eventually perishes; Mind that churns out horrible thoughts that are akin to dreadful, yet unseen, ghosts; purposeless actions that keep accumulating more and more karma, without realising the blessing of a human birth and its real purpose…

.

Humans who are a combination of all the above are no different than sheep that are part of a herd that perform routine actions similarly. Yet, their ego makes them believe that they are someone unique and special, lifetime after pointless lifetime. It is imperative that we ponder ‘why’ such a meaningless thing happens to us, in order to attain clarity (about the true purpose of being born as human).

.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #72

அருட்குறள் ~ ஞானப்பால் #72
ஆறாவதைக் கொண்டைந்து கடந்தெதுவு முள்ளபடி

மாறாததைக் காண்பதுயிர் மெய்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
பிழைப்பு சார்ந்த வாழ்க்கையில், ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையெல்லாம் பகுத்தறியவே ஆறாவது புலனாகிய புத்தி [அ] அறிவு பயன்படுகின்றது.
.
ஐம்புலன்களின் புறம் நோக்கிய உணர்தலைக் கடந்து, அதே அறிவைப் பயன்படுத்தி, வாழ்வை உள்ளது உள்ளபடி, பகுத்தறிய முயலாமல், நேரடி அனுபவமாகத் தன்னுள்ளே உணர்வது, உயிர்மெய் அறிதல் [அ] ஞானோதயம் அடைதலாகும். இதுவே ‘ஞான யோகம்’ என்ற ஆன்மீகப் வழியாகும்.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
In the survival focused existence, the mind or intellect, aka sixth sense, is useful only to dissect and comprehend whatever is experienced through the five senses.

.

The same intellect can go beyond the confines of external focused sense-based perception, and used to observe and experience ‘Life, the way it is,” i.e. perceive reality, as it is, without any intellectual interpretation, within oneself. Thus, a seeker can attain self-realisation, using the intellect or mind itself as a tool. This is the path of GnAna yoga.

.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #67

அருட்குறள் ~ ஞானப்பால் #67
மனந்தூண்டப் புலன்தேடுங் கணநேரக் களிப்பூறப்

பிணமாகுந் தினமோடி வரும்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~
புலன்களால் அடையும் இன்பமானது குறுகிய காலமே நீடிக்கும். ஆகையால், மனமானது அத்தகைய சிற்றின்பத்தைத் தொடர்ந்து தேடுமாறு, புலன்களைத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

.

மனிதப் பிறவி என்பது, உயிர்மெய் அறிந்து, பிறப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து விடுபட்டு வீடுபேறு [அ] முக்தி எனப்படும் பேரின்ப நிலையை அடைவதற்கான அரிய வாய்ப்பு.

.

ஆனால் ஒருவர் தன் பிறவிப்பயனை அறியாது, மனத்தின் தூண்டல் வசப்பட்டு, சிற்றின்பக் களிப்பிலேயே ஊறிக் கிடப்பாராயின், அவரது உடல் வலுவிழந்து, உயிரானது அவ்வுடலால் இனிப் பயனில்லை என்று அதனை விட்டு நீங்கும் இறுதித் தினமானது விரைந்து வந்து விடும்.
.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

Happiness acquired through the sense organs will last only a shortwhile. So, one’s mind keeps on nudging oneself to search for such fleeting happiness, again and again.

.

Being born as human is a wonderful and rare opportunity to realise the Truth (about Creator, creation, existence, et al) and attain the eternal state of bliss known as Mukthi.

.

So, when one fails to realise the purpose of human birth and remains immersed in the fleeting sensual pleasures, by succumbing to the temptations caused by the mind, then one’s physical form (body) will become weaker and the life energy will choose to leave the body sooner, as the body will be incapable of holding it for long, i.e. death will come rushing, ahead of its schedule, to the person who is stuck / obsessed with sensual pleasure.
.
~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #41

அருட்குறள் ~ ஞானப்பால் #41
பரிவேகம் வட்டவழி சுற்றுமனம் விட்டறிமெய்

கரியாகக் கட்டையெரி முன்.

.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~
சிந்தனை குதிரையைப் போன்று விரைந்து செல்லும் தன்மையுடையது. சிந்தனையின் தோற்றுவாயான மனத்தின் பாதையானது பந்தயக்குதிரை ஓடும் வட்டம் போன்றது. பிறப்பு-பிழைப்பு-இறப்பு என்றே மீண்டும் மீண்டும் – பல பிறவிகளில் – சுற்றிவரச் செய்யும் மனத்தின் பிடியிலிருந்து விடுபட்டால்தான், உயிர்மெய் அறிவது சாத்தியமாகும். அவ்வாறு விடுதலை அடைவதற்கான முயற்சியை, ஒருவர் தனது உடல் மயானத்தில் எரிந்து போவதற்குமுன் (மரணத்திற்கு முன்பாகவே) தொடங்கிவிடவேண்டும்.

.
KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

Thoughts traverse like a horse on full trot. The way of the Mind, from which thoughts are generated continuously, is like the circular racetrack on which thought horses keep going around. In order to realise the Truth about Life, one must leave the path of the mind, which keeps one in the seemingly never-ending cycle of birth-survival-death, for many a lifetime. But one must initiate action to liberate oneself before the body gets cremated and turns to ashes (before death, in this lifetime).
.
~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #32

அருட்குறள் ~ ஞானப்பால் #32
அலைவரும் நில்லாதாழி அடக்காது அங்குநிற்கும்
நிலைபெறக் கொல்லாதோட விடு.
விளக்கம்

~~~~~~~~~

அலைகள் ஓயாது வந்துகொண்டிருந்தாலும், அவை தோன்றும் கடலானது அவற்றைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை. பரபரப்பாகத் தோன்றும் அலைகள் நிலையற்றவை, ஆனால் அமைதியில் ஆழ்ந்த பெருங்கடல் நிலையாக இருக்கின்றது.
அலைகளைப் போன்ற எண்ண ஓட்டத்தை முயற்சிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து, அவற்றின் ஓட்டத்தை* இயல்பாக நிகழவிடுவதே, உயிர்மெய் அறியத் தேவையான அசைவற்ற நிலையை அடையும் வழி.
*ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் மனத்தின் இந்த இயல்பைப் ‘பிரவாகம்’ என்கிறார். எண்ணப் பிரவாகத்தைத் தடுக்க முயல்வது மடமை. அதை விடுத்து அப்பிரவாகத்தை அதன் போக்கில் விட்டு, ஒரு பார்வையாளராகக் கவனித்து, பயனுள்ள எண்ணங்களை மட்டும் தேர்வுசெய்து செயல்படுத்த முயல்வது அறிவுடைமை.

Explanation
~~~~~~~~~~~

Even though the waves keep coming ceaselessly, the ocean from which they come doesn’t make any attempt to control or stop them. While the waves (which appear busy and active) last momentarily, the vast and deep ocean (that appears quiet and still) had been around for a really long time.

Realising the futility of trying to control or stop the perennial flow* of thoughts, and letting them flow naturally, is the way to attain the stillness that’s required for realisation of Truth.

*Sri Bhagavath ayya refers the flow of thoughts as a torrent. Trying to stop a torrent indicates one’s ignorance. The wiser ones would instead let the thoughts flow (as it’s their nature), simply observe them in a detached manner and only choose the ones that are purposeful for initiating action.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #29

அருட்குறள் ~ ஞானப்பால் #29
உண்டதுள் நிற்காத பிண்டமுள் நோக்கி
அண்டமும் கற்காம லறி.
குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~

பொருள் மற்றும் புகழ் போன்ற நிலையற்றவற்றைச் சேகரிப்பதில் வாழ்நாளைச் செலவிடும் மனிதர்களின் உடலானது, அது உட்கொட்ட உணவைக்கூடத் தன்னுள் சேகரித்து வைக்க முடியாமல் கழிவாக வெளியேற்றி விடும். ஆனால், தியானத்தில் அமர்ந்து, அதே அழியக்கூடிய பிண்டத்தின் உள்ளே நோக்கும்பொழுது, எல்லையற்ற அண்டத்தைப் பற்றிய அனைத்தையும், முறையான கல்வி ஏதுமில்லாமல், முழுமையாக உணர்ந்து அறிய முடியும்.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

The body of humans, who spend precious lifetime in accumulating impermanent things such as wealth and fame, can’t even hold the food it gobbles up, and expels it as excreta. But, if one can sit still (in a meditative state) and perceive within the same perishable body, then one will know everything about the seemingly boundless vast Cosmos, without any formal learning.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #25

அருட்குறள் ~ ஞானப்பால் #25
கள்ளமனம் செல்லும்வழி யலையாது புலன்மூடி

உள்ளதைநீ உள்ளபடி யுணர்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
தவறான பாதையைக் காட்டி மோசம் புரியும் கட்டுப்பாடற்ற மனம் செல்லும் வழியில் சென்று அலைந்து வாழ்க்கையை வீணடிக்காமல், ஐம்புலன்களைக்* கட்டுப்படுத்தி, வாழ்வை ‘உள்ளது உள்ளபடி’ உணர்வதற்கு ஆன்மீக சாதகர் முயல வேண்டும்.

*விழி ~ பார்த்தல்; செவி ~ கேட்டல்; நாசி ~ நுகர்தல்; நாவு ~ சுவைத்தல்; தோல் (கரங்கள் மூலம்) ~ தொடுதல்.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

Instead of roaming aimlessly along the devious ways on which the deceptive mind traverses uncontrollably and wasting precious lifetime, a seeker must learn to control the five sense organs* (and their actions) in order to perceive and experience ‘Life, the way it is.’

*Eye ~ seeing; ear ~ hearing; nostrils ~ smelling; tongue ~ tasting; skin (primarily through limbs) ~ touching.
~Swamy | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑