மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #93

அருட்குறள் ~ ஞானப்பால் #93
பற்றேது மில்லாது பசுபதிபொற் பதஞ்சேர

சற்றேயுள் ளசையாது நில்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~
படைப்பு, அதாவது ஏதோ ஒரு படைப்பாக இப்பிறவியில் உள்ள உயிரானது பசு. படைத்தவன், அதாவது படைப்பிலுள்ள அனைத்தையும் உருவாக்கி, காத்தருளி, விடுதலை அளிப்பவர் பதி. எல்லாம் வல்ல இறையான ஈசனைப் பசுபதி என்று துதித்து வணங்குவது இதனாலேயே என்று அறிக.

.

பரம்பொருளான பசுபதியின் பொற்பாதத்தில் முழுமையாகச் சரணடைவதே, முக்தி அடையச் சிறந்த வழியாகும். முழுமையான சரணாகதி நிகழ வேண்டுமென்றால் பசுவாகிய படைப்பு, தனது பற்றுக்களை விட்டொழிக்க வேண்டும். உற்றார், செல்வம், உணவு, புகழ், இனம், மதம், மொழி, செல்வாக்கு போன்ற பற்றுக்கள் நம்மைக் கட்டியுள்ள தளைகளே. அவற்றால் கட்டுண்டு இருப்போர் பிறப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறும் வீடுபேற்றை ஈசனிடம் வேண்டாமல், பிழைப்பு சார்ந்த உலகில் சிறப்பாக வாழ்வதற்கான வரங்களைக் கேட்டுக் கொண்டிருப்பர்.

.

பிழைப்பே வாழ்வு என்பது கற்ற மற்றும் பெற்ற அறிவால் விளையும் அறியாமையால் ஏற்படும் நம்பிக்கை. இந்த மாயைத்திரை விலகி மகேசனை அறிய, ஆன்மீக சாதகர் குரு அளித்த பயிற்சிகளை முறையாகச் செய்து, அசைவின்றி அமர்ந்து*, படைத்தவனாகிய பதியே (ஈசன்) படைப்பாகிய பசுவினுள் (நாம் உட்படப் படைப்பிலுள்ள உயிர்கள் அனைத்தும்) உயிர்ச்சக்தியாக இயக்குவதை நேரடி அனுபவமாகக் கண்டுணர வேண்டும். இதுவே உயிர்மெய் அறிதல் எனும் ஞானோதயம் ஆகும். ஈசனது உயிர்சக்தி இயக்கமே, ஹிருதயத்தில் நிகழும் தாண்டவமாகும். தான் என்ற ஆணவம் அடங்கி, எக்கணமும் எம்பெருமானின் களிநடனத்தைத் தன்னுள்ளேயே காணும் இப்பேரானந்த நிலையை அடையும் வழியே யோகம்.

.

*பல ஆசனங்களை பயின்று பயிற்சி செய்து வந்தாலும், அவற்றில் ஏதேனும் ஒன்றில் சாதகர் அசையாது அமரும் தன்மை தானாகவே நிகழும். இதனையே பதஞ்சலி மகரிஷி “சுகம் ஸ்திரம் ஆசனம்” என்று யோகா சூத்திரத்தில் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.
.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
A being that’s present in creation, in any given lifetime, is known as Pashu. The Creator, who creates all life, nurtures and liberates them is Pathi. Lord Shiva is worshipped as Pashupathi, indicating he’s the lord of all creation.
.
Surrendering unconditionally at the golden feet of Lord Pashupathi is a wonderful way to attain mukti (ultimate liberation from lifecycle). For unconditional surrender to happen, the Pashu aka creation has to let go of all attachments. Family, wealth, food, fame, race, religion, language, power, etc. are all attachments that bind us to the existence of commercial survival. Those who are bound by such attachments will seek boons from Lord Shiva for better quality of living on the survival plane of existence, instead of seeking the ultimate liberation from the repetitive birth-death spiral.
.
Believing that survival is life is ignorance caused by the intellect, which is nothing but an accumulation of learned and acquired knowledge. In order for this curtain of maya (illusion) to be removed and be receptive to the Grace of MahEswara, a seeker must diligently practice the sadhana offered by the Guru (Realised Master), sit still* and realise the Truth that it’s the Pathi (Eswara / Creator) that’s active within each and every one of the Pashus (us / beings in creation) as Life energy. This realisation, which will be a direct perception of reality, within oneself and everywhere, is known as self-realisation aka enlightenment. The active presence of Eswara in the hridhayam (spiritual heart) of a being is the ThANdava (dance of Life) that happens perennially, but remains unnoticed by most beings. When one’s ego is eradicated, a being can perceive / experience the ThANdava within oneself, every living moment. The path to attain this eternal state of bliss is Yoga.
.
*Even as a seeker learns and practices many an Asana, in one of them s/he will naturally attain stillness, i.e. remain seated for a duration sans any movement. This is what is indicated by Pathanjali Maharishi in his Yoga Sutras as “Sukham Sthiram Asanam.”

.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #90

அருட்குறள் ~ ஞானப்பால் #90
அகரத் தெழுந்து உகரத் துழன்று
மகரத் தடங்கு முயிர்.

.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
படைப்பிலுள்ள எல்லா உயிர்களும் அகரத்தில் தொடங்கி, உகரத்தில் உழன்று, மகரத்தில் அடங்கும் தன்மை உடையவை.

.

பிழைப்பு சார்ந்த சமூக வாழ்வில் சிக்கியுள்ள உயிர்கள், அன்னையின் கர்ப்பத்தில் (அகரம்) தொடங்கி, உலக வாழ்க்கையில் (உகரம்) உழன்று, மரணத்தின் பின் மண்ணுள் (மகரம்) அடங்கும். படைப்பிலுள்ள உயிரானது உயிர்மெய் (ஞானோதயம்) அறிந்து, வீடுபேறு என்ற முக்தி நிலையை அடையும் வரை, இத்தகைய பிறப்பு-இறப்பு சுழற்சி தொடரும்.

.

ஆன்மீகப் பாதையில் செல்லும் சாதகர்கள், அ(கரம்)+உ(கரம்)+ம(கரம்) என்பது படைத்தலின் ஆதாரமானது ஓங்காரம் என்ற பிரணவ ஒலி என்பதை அருளால் அறிந்து, படைத்தவனின் ஒலிவடிவமாகிய (நாதப்பிரம்மம்) அதனுடன் படைப்பாகிய நமது அதிர்வுகள் (vibration) ஒத்திசைவு (resonance) அடைவதற்கான பயிற்சிகளின் மூலம், படைப்பு வேறு படைத்தவன் வேறு என்ற அறியாமையால் விளையும் இருமை நிலையைக் கடந்து, ஓங்காரத்துடன் ஒன்றி, பிறப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து விடுதலை பெறுவதையே மனிதராகப் பிறவியெடுத்தலின் பயன் என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சிகளைத் துவக்கவேண்டும்.

.

.

KuRaL explanation

~~~~~~~~~~~~~~~~~~

All beings in creation begin with / arise from ‘A’, survive in / suffer with ‘U’ and perish / cease to exist in ‘M’.
.
In the survival plane of existence, ‘A’ represents mother’s womb, where life begins for any being; ‘U’ is the survival routine in the commercial world, toiling for a decent living; and ‘M’ represents earth, into which all life forms go back, post death. Until a being realises the pointless nature of such existence, and strives for self-realisation and mukti, with the guidance of grace, it’ll remain stuck in the birth-death lifecycle spiral.

.

For seekers on the spiritual path, A+U+M aren’t individual states of existence, but ‘AUM’, the primordial sound, which represents the entire cycle of creation, preservation or sustenance and transformation, at the cosmic level. Knowing this truth, with the guidance of Guru’s Grace, one must start the sadhana (spiritual practices) right away, in order to attain resonance of the (individual being) creation’s (frequency of) vibration with that of the creator, i.e. NhAdha Brahmam. Attaining such resonance will eliminate the duality that arises from ignorance and not only enable a being’s self-realisation (aka enlightenment) but also lead to mukti, i.e. the ultimate liberation from the repetitive birth-death lifecycle, which is nothing but union of the creation with the Creator!

~Swamy | @PrakashSwamy

இன்றைய தரிசனம் ~ எங்கே தொடங்கி எங்கும் வரை…

இன்றைய தரிசனம் ~ எங்கே தொடங்கி எங்கும் வரை…
பல்லாயிரக்கணக்கான கடவுள்கள் உள்ள தொன்மையான பாரத கலாச்சாரத்தில், கடவுளைக் கண்டோர் என்று வணங்கப்படும் யோகிகள் மற்றும் ஞானிகள் பலர் எக்காலத்திலும் இருந்து வந்துள்ளனர். ஒரே கடவுள் எனும் வேற்று தேச மதங்களிலும், கடவுளைக் கண்டோர் சிலரேனும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். எனினும், “எங்கே கடவுள்” என்ற கேள்விக்கு விடை தேடும் பல கோடி பக்தர்கள் மற்றும் ஆன்மீக ஆர்வலர்களின் தேடலும், மனித வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
ஸ்வாமியின் குருவாகிய சத்குருவின் உரைத்தொகுப்பு ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கையில், “கடவுள்” என்ற சொல்லின் தமிழாக்கத்தை அவர் ரசித்துப் பாராட்டியதைக் கண்டபோது, “ஆஹா, என் தாய் மொழியான தமிழில், எத்தனையோ பேரின் பல பிறவித் தேடலுக்கான விடையை, ஒரே சொல்லில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்டுச் சென்று விட்டாரே யாரோ ஒருவர்,” என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
தமிழ், சமஸ்கிருதம் போன்ற தொன்மையான மொழிகளில் உள்ள சொற்கள் பலவும், பதம் பிரித்துப் பொருள் காணும் வகையில் ஆழ்ந்த பொருளுடையவை. உதாரணமாக, கடவுள் = கட + உள் எனலாம். இவ்வாறு பதம் பிரிக்கையில், இல்லாத ஒன்றாக மனிதன் தேடும் எல்லாமான ஒன்றின் தன்மை மிக எளிதாக ஆன்மீக ஆர்வலராக இல்லாத ஒருவருக்குக் கூட விளங்கி விடும். எவ்வாறு?
முதலில் “கட” என்பதை சற்றே ஆழ்ந்து நோக்குவோம். கட என்பது “கடந்து செல்” என்ற வழிகாட்டுதலின் சுருக்கம். எனில், “எதைக் கடந்து செல்வது?” என்ற கேள்வி எழுவது இயல்பு.
பிழைப்பு சார்ந்த வாழ்வில், கடந்து செல்லக்கூடியவையாக உள்ளவை காலமும், தூரமும். காலத்தைக் கடந்து சென்றால், நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்குச் செல்வது என்று பொருள்படும். பெரும்பாலான மனிதர்கள் பின்னோக்கியும் செல்வதுண்டு – அதனால் வாழ்விற்குப் பெரிதான பலன் இல்லாவிட்டாலும் கூட!

ஆனால், ஆன்மீகப் பாதையில் உள்ள ஆர்வலர் எவருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒரு எளிய உண்மை, “இந்தக் கணம் தவிர்க்க முடியாதது,” என்பதாகும். அதாவது, நிகழ்காலத்தின் இந்தக் கணம் மட்டுமே காலத்தைப் பொறுத்தவரை மெய்யாகும். இறந்த மற்றும் எதிர் காலத்தின் எந்தக் கணமும், இந்தக் கணத்தில் மெய்யாக இருக்க முடியாது. “காலம் கடந்துவிட்டது” என்பது ஒருவரது வாழ்நாள் முடிந்து விட்டதைக் குறிக்கவும் பயன்படுகின்றது என்பதால், “கட” என்பது நிச்சயமாக “காலத்தைக் கடந்து செல்” என்பதைக் குறிப்பதாகக் கொள்ள முடியாது.
சரி, பிழைப்பு சார்ந்த சமூக வாழ்வில் ஒரு மனிதனது முன்னேற்றம் பல தடைகளைத் தாண்டிய பின்னரே நிகழ்கின்றது என்பதால், “கட” என்பது ஒருவேளை தூரத்தைக் குறிக்கின்றதோ என்றால், ஆன்மீகப் பாதையில் உள்ள ஒருவருக்கு ‘எத்தனை தூரம் செல்ல வேண்டும்,’ ‘எங்கு செல்ல வேண்டும்,’ ‘அதற்கு எவ்வளவு காலம் ஆகும்,’ என்று பல புதிய கேள்விகள் தோன்றி மேலும் குழப்பிவிடும். ஆக, “கட” என்பது தூரத்தைக் கிடைப்பதற்கான வழிகாட்டுதலாக இருக்கவும் வாய்ப்பில்லை – குறிப்பாக ஆன்மீகத்தில்.

காலம், தூரம் போன்ற வரையறைகளை வகுத்தது யார் என்று பார்த்தால், நம்மைப் போன்ற மனிதர்கள்தான். மனிதன் உருவாக்கிய எதுவும், ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே இருப்பது வெள்ளிடை மலை. ஒரு மனிதன் “நான் இன்னார்” என்று தன்னைக் குறிக்கும் அடையாளமும், அவ்வாறே வரையறைகளுக்கு உட்பட்டது. தேசம், மதம், இனம், மொழி, கல்வி, செல்வம், குடும்பம், தொழில், நம்பிக்கைகள், விருப்பு, வெறுப்பு, என்று பற்பல வரையறைகளைக் கொண்டே மனிதன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான்.
சமூக வாழ்வில் இந்த “நான்” என்ற தனிப்பட்ட அடையாளத்திலிருந்து விடுபட முடியாமல் கட்டுண்டு போகும்போது, கடவுள் என்பது கடுமையாக முயன்று, நெடுங்காலம் பயணித்து, நெடுந்தூரம் சென்று, இமய மலை போன்ற எங்கோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணக்கூடிய அபாரமான ஒன்று என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றி விடுகின்றது. பெரும்பாலான மதங்களும் இறைவன் எங்கோ விண்ணுலகில் இருப்பதாகத் தொடர்ந்து கூறி, இத்தகைய நம்பிக்கையை விடாது போதனை நீரூற்றி வளர்த்து விடுவது யாவரும் அறிந்த உண்மை.

நான் வேறு, கடவுள் வேறு,” அதாவது, “படைப்பு வேறு, படைத்தவன் வேறு” என்ற இருமை நிலை, மத மற்றும் சமூக நம்பிக்கைகளால், ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வேரூன்றிவிட்ட ஒரு கருத்தாகும். இந்நிலை நீடிக்கக் காரணம் நமது அறியாமையே. ஒரு புறம், “இறைவன் எங்குமிருக்கிறான்,” என்று கூறி, அதற்குப் பிரஹலாதன் போன்ற உன்னதமான பக்தர்களின் வாழ்வை உதாரணமாகக் கூறும் மதங்களே, “இறைவன் கோயிலின் உள்ளேதான் இருக்கிறான்” என்றும் கூறி, பக்தர்களுக்கு வழிகாட்டுவது, இந்த அறியாமை விலக வழி இல்லாது செய்து விடுகின்றது.

எங்கும் இருக்கக்கூடிய இறைவன், படைப்பிலுள்ள எல்லா உயிர்களிலும் இருந்தாக வேண்டுமல்லவா. எனில், நம்மைப் படைத்த இறைவன், புல், பூச்சி தொடங்கி, நம்மைப் போன்ற உயிரினங்களினுள்ளும் இருக்கின்றார் என்பதுதானே உண்மை. ஆக, படைப்பினுள்ளிருந்து படைக்கப்பட்டவற்றை எல்லாம் இயக்கும் சக்தியானது இறைசக்தியே. அதே சமயம், அப்படைப்பு நிகழும் வெற்றிடமாகிய பெருவெளியில் அசையாது இருக்கக்கூடிய இருப்பும் இறைத்தன்மையை. இறைவனின் இத்தன்மையையே நமது கலாச்சாரத்தில் மிக எளிமையாகப் புரியக்கூடிய வகையில், சக்தி மற்றும் சிவம் என்று உருவாக்கப்படுத்தியுள்ளனர். அசையாத் தன்மையாகிய சிவத்தில், அதாவது ஒன்றுமற்ற வெற்றிடமான பெருவெளியில், சக்தியின் அசைவால் படைப்பு உருவானது. விஞ்ஞானம் இந்நிகழ்வையே பெருவெடிப்பு என்ற அண்டத்தின் தொடக்க கணமாகக் கூறுகின்றனர்.
மதங்கள் கூறும் அடையாளங்களைக் கடந்து, ஏதுமற்றதும், எல்லாமாக உள்ளதும் இறையே என்ற இந்த எளிய உண்மை நமது சிற்றறிவுக்குப் புரிந்து விட்டால், பின்னர் எங்குமுள்ள இறைவனை, எல்லாவற்றிலும் காண்பது எளிதாகிவிடும். என்றாலும், புலன் சார்ந்த புரிதலை ஆதாரமாகக் கொண்ட காரண அறிவால் இயங்கும் மனிதர்களுக்கு, படைப்பிலுள்ள உயிர்களின் வடிவம் அல்லது உருவம் ஒரு தடையாக இருக்கின்றது. அதாவது, படைப்பிலுள்ள ஒவ்வொரு உயிரும், வெவ்வேறு வடிவங்களில் இருப்பதால், அவை வெவ்வேறானவையாகத்தான் இருக்க வேண்டும் என்று காரண அறிவு முடிவுக்கு வருகின்றது. ஆனால் இது அறிவன்று, அறியாமை ஆகும். இந்தத் தடையை ஒருவர் கடந்தால்தான், பின்னர் எங்கும், எல்லாவற்றிலும் இறைவனைக் காண இயலும். இந்தத் தடையைக் கடப்பது என்பதை எங்கிருந்து தொடங்குவது?

உயிர்மெய் அறிதல் நிகழ மிகப்பெரிய தடையாக இருப்பது “நான் ஒரு தனிப்பட்ட பிறவி” என்ற எண்ணமே ஆகும். இதே எண்ணமே, மற்ற எல்லாப் படைப்பும் தன்னைப் போன்று ஒரு தனிப்பட்ட பிறவியே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. இதற்கு ஆதாரமாக விளங்கும் அறியாமையைக் கடத்தலையே “கட” என்ற பதத்தின் பொருளாகக் கொண்டால், “தன்னைக் கடத்தல்” அல்லது “நான் என்ற அடையாளத்தைக் கடத்தல்” என்ற செயலே, அறியாமையைக் கடந்து அறிதலுக்குச் செல்லும் வழியாகும் என்பது தெளிவாக விளங்கி விடும். சமூக வாழ்வானது முற்றிலும் அடையாளத்தைை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால், ஒருவர் தாமாகவே இந்த அடையாளம் விடுதலை சாதிப்பது மிகக் கடினமான செயலாக ஆகிவிட்டது. எனவே, பிழைப்பு சார்ந்த வாழ்விில் ஒருவர் முன்னேற எவ்வாறு mentor எனப்படும் வழிகாாட்டி உதவிகரமாக இருக்கின்றாரோ, அவ்வாறு ஆன்மீகப் பயணத்தில் முன்னேறிச் செல்வதற்கும் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார்.
தன்னைக் “கட“ந்த நிலையில் எஞ்சியிருக்கும் கேள்வி, “எங்கே செல்வது” என்பதாகும். இதுவே “கடவுள்” என்ற சொல்லின் இரண்டாவது பதத்தின் விளக்கமாக அமைந்துள்ளது.

ஐம்புலன் சார்ந்த அனைத்துப் புரிதலுமே வெளி நோக்கியவை. அதாவது, புலன் சார்ந்த புரிதல் மற்றும் காரண அறிவானது, வெளி நோக்கிய புற வாழ்வின் தன்மையாகும். எனவே, காரண அறிவைக் கடந்த புரிதலான கடவுள் தன்மை என்பது புறம் சார்ந்ததாக இருக்க முடியாது. எனில், அது அகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அகத்தை நோக்க வேண்டுமென்றால், ஒருவர் தன்னுள் நோக்க வேண்டும். இதனையே “உள்” என்ற பதம் குறிக்கின்றது. ஆனால் புறத்தில் உள்ள ஓரிடத்தைக் கண்டுபிடிக்கவே map மற்றும் driving directions தேவைப்படும் மனிதர்கள், அகத்தினுள் ஐம்புலன்களின் உதவியின்றி இறையைச் சென்று சேர்வது எவ்வாறு. ஒருவரது உள்நோக்கிய தேடலுக்கு வழிகாட்டுவது யாராக இருக்கமுடியும்!

ஆக, மனிதன் (படைப்பு) கடவுளைக் (படைத்தவன்) கண்டுணர வேண்டுமெனில், அவன் தன்னை விடுத்துத், தன்னுள் காணப் பழக வேண்டும். இதற்கான வழிமுறையே தியானமாகும். பகவான் ரமண மகரிஷி தியான நிலையை அடைவதற்கான மிக எளிய வழியாக “சும்மா இரு” என்றார். சும்மா இருத்தல் என்பது செயலற்று இருத்தல் அல்ல. சிந்தையற்று இருத்தல். அவ்வாறு செயலுக்கு ஆதாரமான சிந்தனை ஊற்றெடுக்கும் மனத்தை அதன் போக்கில் விட்டுவிட்டு, மனத்தின் இடைவிடாத ஆரவாரத்தால் பாதிக்கப்படாமல், அமைதியாக தியானத் தன்மையில் நிலையாக இருக்கக்கூடிய ஒருவருக்கு, தன்னுள் இருக்கும் இறையைக் காண்பது மட்டுமல்லாது, அவ்விறையே தன்போன்று இருக்கக்கூடிய அனைத்துப் படைப்பிலும், அவை இயங்கக்கூடிய பெரு வெளியிலும், அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ளதை நேரடி அனுபவமாக உணரமுடியும். அவ்வாறு உணர்ந்தோரையே நாம் ஞானோதயம் அடைந்தவர் என்கிறோம். தான் அடைந்த ஞானோதயம் என்ற பேரானந்த நிலையைப் பிறரும் அடைய வழிகாட்டும் மெய்ஞானிகளையே குரு என்கிறோம்.

உயிர்மெய் அறியும் அல்லது ஞானோதயம் அடையும் வாய்ப்பு, மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் உள்ளது. ஞானோதயம் அடைந்த ஒரு குருவின் வழிகாட்டுதலில், குரு அடைந்த அதே பேரானந்த நிலையை, ஆன்மீக ஆர்வலர் யார் வேண்டுமானாலும் தமது எந்தப் பிறவியிலும் அடைய இயலும். அந்நிலையை அடைந்து, பெருவீடு எனும் பிறப்பிறப்பு அற்ற முக்தியை அடைய ஒரு குருவின் வழிகாட்டுதல் உங்களுக்கு இப்பிறவியிலேயே ஏற்பட, சத்குரு அவர்களின் அளப்பரிய அருள் வழிகாட்டட்டும்.
Be Joyful & Spread the Cheer 🙂
~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #63

அருட்குறள் ~ ஞானப்பால் #63
தேடுதற் கேதுமிலை தெளிந்திடுங் கணந்தனில்

ஓடாது ஒளிருமுள் ளிறை.

குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~

ஆன்மீக ஆர்வலர்கள் பெரும்பாலும் இறைவன், ஞானோதயம், முக்தி ஆகியவற்றைத் தேடிப் பல திருத்தலங்களுக்குச் செல்வதும், பயிற்சிகளில் பங்கெடுப்பதும், சான்றோரின் பகிர்வுகளில் ஆழ்ந்து மெய்யறிய முயல்வதும் எப்போதும் நிகழ்ந்து வருகின்றது. ஆனால் ஒரு நிலையில் இத்தகைய வெளிப்புறத் தேடல்களால் விடுதலை பெற வாய்ப்பில்லை என்ற தெளிவு ஏற்பட்டால், உயிர்மெய் அறிதல் தன் செயலால் ஆகக்கூடிய நிகழ்வில்லை என்ற உண்மை புரிந்த அந்தக் கணத்திலேயேகூட, அங்குமிங்கும் ஓடியலையாமல், இருக்குமிடத்திலேயே, தன்னுள்ளேயே தான் இத்தனை காலம் தேடியலைந்த இறைத்தன்மை ஒளிர்வதைக் கண்டறியக்கூடும்.

.

இதனையே ரமண மஹரிஷி ‘சும்மா இரு’ என்ற மஹாவாக்கியம் மூலம் குறிப்பாலுணர்த்தி அருளினார்.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
Many a spiritual seeker go on pilgrimage to many holy places, participate in many programs and get immersed in the sharing of Realised Beings, looking for God, Realisation and Mukti. Eventually, after many such pursuits, one may realise that such external searches / pursuits aren’t really useful for attaining liberation.

.

When one accepts the fact that attaining self-realisation and mukti aren’t possible with one’s own actions / effort alone, at that very moment itself, it’s possible that one may experience the divine glowing within oneself, wherever one is, without having to run around anywhere.

.

BhagavAn RamaNa Maharishi has implied this Truth through the mahAvAkya “SummA iru” i.e. ‘Just Be’ or ‘Be Still.’

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #62

அருட்குறள் ~ ஞானப்பால் #62
அசையாச் சிவமொடு விசையாம் சக்தியிணைந்

திசைநடம் புரிவதுயிர் மெய்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
அசைவற்ற சமாதி நிலையில் இருப்பது சிவம். அசைவிற்கு ஆதாரமான விசையாக இருந்து அனைத்தையும் இயக்குவது சக்தி. சிவமும், சக்தியும், இசையும் நடனமும்போல், ஒன்றிணைந்து எங்கும் நிறைந்த ஒரு இருப்பாய் விளங்குவதைத் தன்னுள் அனுபவபூர்வமாக உணர்வதே உயிர்மெய் அறிதல் எனும் ஞானோதயம் ஆகும்.
.

மஹாசிவராத்திரி என்று கொண்டாடப்படும் இந்த மகத்தான இரவில், சிவ-சக்தி ஐக்கிய இருப்பை நம்முள் உணர்தல், அம்மையப்பன் அருளாலும், குருவின் கருணையாலும் நிகழட்டும். ஷம்போ.

.

~ ஸ்வாமி | @PrakashSwamy

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
That which remains still in the state of samAdhi is ShivA. That which is the fundamental energy that enables any kind of movement / action is Shakthi. Knowing that ShivA and Shakthi are an inseparable presence like music and dance, everywhere in existence, as an experience (direct perception) within oneself, is self-realisation aka enlightenment.

.

As Mahashivarathri is celebrated tonight, may the union of Shiva-Shakthi be realised within us, with the boundless Grace of Ammaiyappan and compassion of the Guru. ShambhO.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #44

அருட்குறள் ~ ஞானப்பால் #44
ஆறெழுத்து ஐயெட்டென வோதுசப்த மடிநாதம்

ஓரெழுத்து ஓசையற்ற ஒலி.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
ஓம் சரவணபவ ~ ஞானமே வடிவான ஸ்கந்த குருநாதனின் மூல மந்திரமாகிய ஷடாட்சரம் (ஆறெழுத்து)
ஓம் நமசிவாய ~ ஆதியோகி ஈசனின் மூல மந்திரமாகிய பஞ்சாட்சரம் (ஐந்தெழுத்து)
ஓம் நமோ நாராயணாய ~ அனைத்து உயிர்களையும் காத்தருளும் அனந்தசயனன் திருமாலின் மூல மந்திரமாகிய அஷ்டாட்சரம் (எட்டெழுத்து)

.

இவ்வகையான ஓதி ஜெபிக்கும் மந்திரங்கள் அனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவது ஓம்காரம் என்ற ஒலி. படைப்பிற்கு ஆதாரமான ஓங்காரமே, கேளாஒலி* என்ற அநஹத நாதமாக படைப்பிலுள்ள உயிர்களுக்குள்ளும் ஓசையின்றி ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

.

*அநஹத நாதம் எனப்படும் கேளாஒலியைப் புறச் செவியால் கேட்க இயலாது. யோகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வரும் சாதகர், ஒரு நிலையில் அவ்வாதார ஒலியை அகத்தினுள் உணர்ந்தறிவர்.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~

AUM SaravaNabhava ~ Lord SkandhaGurunhAthan’s moola mantra with 6 syllables

AUM Namah ShivAya ~ Adiyogi Shiva’s moola mantra with 5 syllables
AUM NamO NhArAyaNAya ~ Lord MahAVishNu’s moola mantra with 8 syllables
All such sacred moola mantras are used for japA (repetitive chanting, usually with the aid of a japa mala) by seekers.
AUM or OM, the basic sound of creation, is the underlying nhAda (sound) of all such mantras. AUM is also the soundless sound aka Anahata nhAda that’s reverberating within all beings in creation.

.

*This soundless sound aka Anahata nhAda obviously can’t be heard with one’s ears. Seekers who perform the yogic practices regularly, will experience this sound as a vibration within themselves, at some point.
.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #44

அருட்குறள் ~ ஞானப்பால் #44
ஆறெழுத்து ஐயெட்டென வோதுசப்த மடிநாதம்

ஓரெழுத்து ஓசையற்ற ஒலி.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
ஓம் சரவணபவ ~ ஞானமே வடிவான ஸ்கந்த குருநாதனின் மூல மந்திரமாகிய ஷடாட்சரம் (ஆறெழுத்து)
ஓம் நமசிவாய ~ ஆதியோகி ஈசனின் மூல மந்திரமாகிய பஞ்சாட்சரம் (ஐந்தெழுத்து)
ஓம் நமோ நாராயணாய ~ அனைத்து உயிர்களையும் காத்தருளும் அனந்தசயனன் திருமாலின் மூல மந்திரமாகிய அஷ்டாட்சரம் (எட்டெழுத்து)

.

இவ்வகையான ஓதி ஜெபிக்கும் மந்திரங்கள் அனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவது ஓம்காரம் என்ற ஒலி. படைப்பிற்கு ஆதாரமான ஓங்காரமே, கேளாஒலி* என்ற அநஹத நாதமாக படைப்பிலுள்ள உயிர்களுக்குள்ளும் ஓசையின்றி ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

.

*அநஹத நாதம் எனப்படும் கேளாஒலியைப் புறச் செவியால் கேட்க இயலாது. யோகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வரும் சாதகர், ஒரு நிலையில் அவ்வாதார ஒலியை அகத்தினுள் உணர்ந்தறிவர்.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~

AUM SaravaNabhava ~ Lord SkandhaGurunhAthan’s moola mantra with 6 syllables

AUM Namah ShivAya ~ Adiyogi Shiva’s moola mantra with 5 syllables
AUM NamO NhArAyaNAya ~ Lord MahAVishNu’s moola mantra with 8 syllables
All such sacred moola mantras are used for japA (repetitive chanting, usually with the aid of a japa mala) by seekers.
AUM or OM, the basic sound of creation, is the underlying nhAda (sound) of all such mantras. AUM is also the soundless sound aka Anahata nhAda that’s reverberating within all beings in creation.

.

*This soundless sound aka Anahata nhAda obviously can’t be heard with one’s ears. Seekers who perform the yogic practices regularly, will experience this sound as a vibration within themselves, at some point.
.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #37

அருட்குறள் ~ ஞானப்பால் #37
அஞ்சடக்கி ஆறொதுக்கி அசையா தமர்பவர்
நெஞ்சகத்தி லொளிகா ணுவர்.
குறள் விளக்கம்

~~~~~~~~~~~~~~~

ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, எதையும் பகுத்துப் பார்க்கும் காரண அறிவால் விளையும் அறியாமையை ஒதுக்கி வைத்து, உடல் மற்றும் மன அசைவற்ற நிலையாகிய தியானத்தில் ஆழ்ந்திருப்போர், படைப்பிலுள்ள உயிர்களின் உள்ளே, ஹ்ருதயம்* எனப்படும் அகத்தினுள் இருக்கும் படைத்தவனை ஒளி வடிவில் கண்டு உய்வர்.
.
*இது இதயம் எனப்படும் உடற்பாகமன்று.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~

Those who control the desires that are associated with the five senses, keep aside the ignorance that arises from the intellect that dissects everything to gather information, and remain in a meditative state where the body and mind are still, will experience the divine within in the form of light, in the hridhayam*.

.
*This is the spiritual heart, not the physical part.

.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #32

அருட்குறள் ~ ஞானப்பால் #32
அலைவரும் நில்லாதாழி அடக்காது அங்குநிற்கும்
நிலைபெறக் கொல்லாதோட விடு.
விளக்கம்

~~~~~~~~~

அலைகள் ஓயாது வந்துகொண்டிருந்தாலும், அவை தோன்றும் கடலானது அவற்றைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை. பரபரப்பாகத் தோன்றும் அலைகள் நிலையற்றவை, ஆனால் அமைதியில் ஆழ்ந்த பெருங்கடல் நிலையாக இருக்கின்றது.
அலைகளைப் போன்ற எண்ண ஓட்டத்தை முயற்சிகள் மூலம் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்து, அவற்றின் ஓட்டத்தை* இயல்பாக நிகழவிடுவதே, உயிர்மெய் அறியத் தேவையான அசைவற்ற நிலையை அடையும் வழி.
*ஸ்ரீ பகவத் அய்யா அவர்கள் மனத்தின் இந்த இயல்பைப் ‘பிரவாகம்’ என்கிறார். எண்ணப் பிரவாகத்தைத் தடுக்க முயல்வது மடமை. அதை விடுத்து அப்பிரவாகத்தை அதன் போக்கில் விட்டு, ஒரு பார்வையாளராகக் கவனித்து, பயனுள்ள எண்ணங்களை மட்டும் தேர்வுசெய்து செயல்படுத்த முயல்வது அறிவுடைமை.

Explanation
~~~~~~~~~~~

Even though the waves keep coming ceaselessly, the ocean from which they come doesn’t make any attempt to control or stop them. While the waves (which appear busy and active) last momentarily, the vast and deep ocean (that appears quiet and still) had been around for a really long time.

Realising the futility of trying to control or stop the perennial flow* of thoughts, and letting them flow naturally, is the way to attain the stillness that’s required for realisation of Truth.

*Sri Bhagavath ayya refers the flow of thoughts as a torrent. Trying to stop a torrent indicates one’s ignorance. The wiser ones would instead let the thoughts flow (as it’s their nature), simply observe them in a detached manner and only choose the ones that are purposeful for initiating action.

~Swamy | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑