யோகி!

யோகா என்றால் இணைதல் அல்லது ஒன்றுதல். படைப்பாகிய உயிர், படைத்தவன் எனப்படும் படைப்பின் மூலத்துடன் இணைவது அல்லது ஒன்றிவிடுவதே யோகா.
.
யோகத்தில் இருத்தல், அதாவது, இருமை நிலையைக் கடந்து, ஒருமை அடைந்து, அந்நிலையில் நிலைத்திருத்தல் என்பது ஒரு சாதகரின் நோக்கமாக இருக்குமெனில், புறத்தே வெளிப்படுத்தும் தனது குணநலன் [அ] குணாதிசயங்கள் மற்றும் அகத்தே ஒளித்து வைத்திருக்கும் தனிப்பட்ட மனிதனின் தன்மை ஆகிய இருவேறு நிலைகளை ஒருமைப்படுத்துதல் என்பது குறிப்பிடத்தக்க முதற்படியாகும். ஏனெனில், இவை இரண்டும் பெரும்பாலான மனிதர்களுக்குச் சீரின்றி அமைந்துள்ளது.
.
வெளிப்படையான குணநலன் என்பது வேறொருவரின் நகைப்புக்குரிய பிரதியைப் போன்ற முகமூடியாகவும், உள்ளே ஒளிந்திருக்கும் தன்மை ஒருபோதும் உண்மையை எதிர்கொள்ளத் திராணியற்ற கோழையாகவும் இருக்கையில், எத்தனை விதமான யோக சாதனைகளைப் பயின்றாலும், அவை பற்றி விலாவாரியாகப் பேசினாலும், அல்லது பயிற்சியே செய்தாலும் கூட, அத்தகைய மனிதர் போகியாகவோ, ரோகியாகவோதான் இருக்கமுடியுமே தவிர, யோகியாக ஆவதென்பது சாத்தியமில்லை – இப்பிறவி முடிவதற்குள்!

~ஸ்வாமி | @PrakashSwamy

மௌனம்!

மௌனம் மனதுக்கான உபவாசம். குழப்பம், கவலை போன்ற அடைப்புகளை அகற்றி, சொற்களின் தொல்லை இன்றி, எண்ண ஓட்டம் தடையின்றி நிகழ அது உதவும். பின்னர் மனம் சலமற்ற அமைதி நிலையை அடையவும் அது வழிவகுக்கும்.

பிழைப்புத் தளத்தில் உழலும் சம்சாரிகள் மௌன விரதத்தை வாரம் ஒரு முறையேனும் கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
ஆன்மீக சாதகர்கள் மௌனத்தைத் தங்களது தினசரி சாதனைகளில் (ஆன்மீகப் பயிற்சி) ஒன்றாகவே மேற்கொள்ள வேண்டும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #104

அருட்குறள் ~ ஞானப்பால் #104
தீபந்தாய் நெய்தந்தை நற்குருதிரி சோதியிறை

பாபஞ்சேர் வினைவிட்டறி மெய்.

.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று மனிதருடைய வந்தனத்திற்கு ஒரு வரிசை உண்டு. பசுவாகிய உயிர், பதியாகிய சிவத்தை அடையப் படிப்படியாக விடவேண்டிய பாசங்களின் படிகளாகவும் [அ] நிலைகளாவும் இவற்றைக் கொள்ளலாம்.

.

இதில் முதற்படியான தாயார் தீபத்தை ஒத்தவர். நெய்யையும், திரியையும் சுமக்கும் தீபம் இல்லையெனில், ஜோதியின் ஒளி இருக்க வாய்ப்பில்லை. தீபமாக உள்ள தாயே ஒரு உயிரின் பிறப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளார்.

.

இரண்டாவது படியான பிதா [அ] தந்தை விளக்கிலுள்ள நெய்யைப் போன்றவர். இது எப்போதும் குறையாமலிருந்தால்தான் விளக்கு தொடர்ந்து ஒளிதர முடியும். எனவே தொழில் செய்தோ, பணி புரிந்தோ, பொருளீட்டி வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து வழங்கும் நெய்போன்று தந்தையானவர் ஒரு உயிரின் வளர்ப்பு மற்றும் இருப்பிற்கு ஆதாரமாக உள்ளார்.
(பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட தற்கால வாழ்வில், தாயார் விளக்கு மட்டுமாக இல்லாமல், நெய்யாகவும் விளங்குவது நடைமுறை உண்மை).
.

தீபமாகிய தாய் மற்றும் நெய்யாகிய தந்தை இருவரும் பிழைப்பு சார்ந்த பொருளாதார வாழ்விற்கு ஆதாரமானவர்கள். ஆனால் மனிதன் பிழைப்பைக் கடந்து வாழ்வை முழுமையாக ‘உள்ளது உள்ளபடி’ அறியும் உந்துதலுடையவன். அந்த மெய்த் தேடலுக்கான ஒளியை அளிக்கும் திரியாக குரு உள்ளார். பெற்றோர் சீராட்டிப் பாதுகாத்து வளர்த்தாலும், திரியற்ற தீபத்தால் ஒளிதர இயலாது. எனவே குருவின் பங்கு மெய்ஞான ஒளிபரவி, அஞ்ஞான இருள் அகல இன்றியமையாதது.
.
தீபம் (தாய்), நெய் (தந்தை), திரி (குரு) ஆகிய மூன்றும் பசுவாகிய உயிருக்கு வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உதவுகின்றன. குருவாகிய திரி அளிக்கும் மெய்ஞான ஒளியில், பசுவானது அதன் உள்ளொளியாக உள்ள பதியாகிய இறைச்சக்தியானது சுடர்விடும் ஜோதியாக ஒளிர்வதை உணர முடிகின்றது.

.

இந்த ஞானப் பேரொளியைக் கொண்டு, அறியாமை எனும் இருளை அகற்றி, முறையற்ற மற்றும் பயனற்ற செயல்களாகிய பாவங்களால் பல பிறவிகளில் கூடிவிட்ட சுமையாகிய கர்மவினையை விட்டொழித்து, வீடுபேறு எனும் இறுதி விடுதலையாகிய முக்தியை அடைவதற்கு உயிரானது முயலவேண்டும். இதுவே மனிதராகப் பிறவி எடுத்ததன் பயன் ஆகும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #104

அருட்குறள் ~ ஞானப்பால் #104
தீபந்தாய் நெய்தந்தை நற்குருதிரி சோதியிறை

பாபஞ்சேர் வினைவிட்டறி மெய்.

.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று மனிதருடைய வந்தனத்திற்கு ஒரு வரிசை உண்டு. பசுவாகிய உயிர், பதியாகிய சிவத்தை அடையப் படிப்படியாக விடவேண்டிய பாசங்களின் படிகளாகவும் [அ] நிலைகளாவும் இவற்றைக் கொள்ளலாம்.

.

இதில் முதற்படியான தாயார் தீபத்தை ஒத்தவர். நெய்யையும், திரியையும் சுமக்கும் தீபம் இல்லையெனில், ஜோதியின் ஒளி இருக்க வாய்ப்பில்லை. தீபமாக உள்ள தாயே ஒரு உயிரின் பிறப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆதாரமாக உள்ளார்.

.

இரண்டாவது படியான பிதா [அ] தந்தை விளக்கிலுள்ள நெய்யைப் போன்றவர். இது எப்போதும் குறையாமலிருந்தால்தான் விளக்கு தொடர்ந்து ஒளிதர முடியும். எனவே தொழில் செய்தோ, பணி புரிந்தோ, பொருளீட்டி வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து வழங்கும் நெய்போன்று தந்தையானவர் ஒரு உயிரின் வளர்ப்பு மற்றும் இருப்பிற்கு ஆதாரமாக உள்ளார்.
(பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட தற்கால வாழ்வில், தாயார் விளக்கு மட்டுமாக இல்லாமல், நெய்யாகவும் விளங்குவது நடைமுறை உண்மை).
.

தீபமாகிய தாய் மற்றும் நெய்யாகிய தந்தை இருவரும் பிழைப்பு சார்ந்த பொருளாதார வாழ்விற்கு ஆதாரமானவர்கள். ஆனால் மனிதன் பிழைப்பைக் கடந்து வாழ்வை முழுமையாக ‘உள்ளது உள்ளபடி’ அறியும் உந்துதலுடையவன். அந்த மெய்த் தேடலுக்கான ஒளியை அளிக்கும் திரியாக குரு உள்ளார். பெற்றோர் சீராட்டிப் பாதுகாத்து வளர்த்தாலும், திரியற்ற தீபத்தால் ஒளிதர இயலாது. எனவே குருவின் பங்கு மெய்ஞான ஒளிபரவி, அஞ்ஞான இருள் அகல இன்றியமையாதது.
.
தீபம் (தாய்), நெய் (தந்தை), திரி (குரு) ஆகிய மூன்றும் பசுவாகிய உயிருக்கு வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் உதவுகின்றன. குருவாகிய திரி அளிக்கும் மெய்ஞான ஒளியில், பசுவானது அதன் உள்ளொளியாக உள்ள பதியாகிய இறைச்சக்தியானது சுடர்விடும் ஜோதியாக ஒளிர்வதை உணர முடிகின்றது.

.

இந்த ஞானப் பேரொளியைக் கொண்டு, அறியாமை எனும் இருளை அகற்றி, முறையற்ற மற்றும் பயனற்ற செயல்களாகிய பாவங்களால் பல பிறவிகளில் கூடிவிட்ட சுமையாகிய கர்மவினையை விட்டொழித்து, வீடுபேறு எனும் இறுதி விடுதலையாகிய முக்தியை அடைவதற்கு உயிரானது முயலவேண்டும். இதுவே மனிதராகப் பிறவி எடுத்ததன் பயன் ஆகும்.

~ஸ்வாமி | @PrakashSwamy

இன்று… ஒன்று… நன்று..! ~ ஆசிரியர், ஆசான், குரு ~ பகுதி 1

இன்று… ஒன்று… நன்று..!

ஆசிரியர், ஆசான், குரு – பகுதி 1

செப்டம்பர் 5 பாரத தேசத்தில் ஆசிரியர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம், 1962ல் இருந்து ஆசிரியர் தினமாகிவிட, மேலைநாடுகளில் ஏதாவதொரு தினத்தை எதற்காகவாவது கொண்டாடுவதைப் போல் (உ.ம்: அன்னையர் தினம், பூமி தினம், பேய்/பிசாசு தினம், உள்ளாடை மட்டும் அணிந்து ரயில் பயணம் செய்யும் தினம்..!), அவர்களைப் பிரதியெடுத்தாற்போல் எதையும் செய்ய முயற்சிக்கும் நம்மவர்களும் இத்தினத்தில் தங்களது ஆசிரியர்களை நினைவுகூர்ந்து, சமூக ஊடகங்களில் எதையாவது பகிர்ந்து, நாலைந்து லைக்காவது வாங்குவதற்கு முயல்வது இயல்பான விஷயமாகிவிட்டது. 

.

நமக்கு சமூக ஊடக உந்துனர் ஆகும் தேவையோ நோக்கமோ எதுவுமில்லாததால், சில நாட்கள் கடந்தபின்னரே இதை எழுதுகின்றோம் என்று நீங்களாகவே கற்பனை பண்ணிக்கொள்ள உங்களுக்கு நிச்சயமாகத் தனிமனித உரிமையுள்ளது. ஜனநாயக தேசத்தின் குடிமக்களுக்கு (அரசாங்க ஆசீர்வாதத்தோடு குடித்துச் சீரழியும் தரப்பினர் அல்ல – citizen என்பதற்கு வேறு உருப்படியான சொல் நிச்சயமாகத் தேவைபடுகின்றது) இதுபோன்ற பல உரிமைகளைப் பற்றிய அறிதல் உள்ளதா என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில் (கல்வி, தொழில் என்ற தனிமனித வாழ்க்கையின் பெரும்பகுதியை விழுங்கும் இரண்டு காலகட்டங்களிலும் இதைப் பற்றிய அறிவு அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வழிமுறை எதுவும் இல்லை; அவர்களாகவே இவை பற்றி – ஊடகங்களில் வைரஸ் போலப் பரவியுள்ள fake newsஐ கவனமாகத் தவிர்த்து – அறிந்து தெரிந்தால்தான் உண்டு), அகல உழுவது போன்ற இத்தகைய மேம்போக்கான கொண்டாட்டம் மற்றும் பகிர்வுகளை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, நம் வாழ்க்கையின் போக்கையே நிர்ணயிக்கும் அல்லது மாற்றும் வகையில் நம்மில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்களான ஆசிரியர் என்ற கதாபாத்திரத்தைச் சற்றே ஆழ உழுது அறிவோம் வாருங்கள். 

.

ஆசிரியர் என்பவர் ஏதாவது ஒரு குறிப்பிட்ட துறையில் கற்பிக்கும் அனுபவமுள்ள, மாணவர்களுக்குத் தன்னிடமுள்ள ஒரு துறை பற்றிய அறிவைப் பகிர்வதன் மூலமாக அத்துறை மீது ஆர்வம் ஏற்படுத்தி, அதுபற்றி மேலும் அறிய வழிவகுப்பவர். நீண்ட நெடுங்காலமாக மாறாத தொழில்/வேலை விளக்கம் (job description) இது. அதனாலேயே இந்த முக்கியமான தொழிலுக்கான மரியாதை குறைந்து போய்விட்டதோ என்று தோன்றுகிறது (வருடா வருடம் அளிக்கப்படும் ‘நல்லாசிரியர்’ விருதால் உண்மையாகவே திறமையுள்ள ஆசிரியர்களுக்கு ஏதேனும் பயனுள்ளதா என்பது பற்றி யாரேனும் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற இன்னமும் வாய்ப்புள்ளது).

.

Swamy @ School
Swamy with his classmates and class teacher @ TVS Lakshmi Matriculation Higher Secondary School, Madurai

முன்னொரு காலத்தில், ஆசிரியர் என்பவர் பல்துறை வல்லுனராக இருந்துள்ளார். குருகுல முறையில் கல்வி கற்ற மாணவர்களின் ஆசிரியர்(கள்), கல்வி, கலை ஆகியவற்றில் பல தரப்பட்ட மாணாக்கர்களை ஒரே சமயத்தில் பயிற்றுவித்த கதைகள் பல புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் உள்ளன. ராமர், கிருஷ்ணர் போன்ற இதிஹாஸக் கடவுளர் தொடங்கி, தமிழ்த்தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும், தொல் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவரான, உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் காலத்தில்கூட (19ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதி), இது நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஏன், ஆதியோகி என்று போற்றப்படும் சிவபெருமான், ஆதிகுருவாக தக்ஷிணாமூர்த்தி வடிவில் சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களுக்கு யோகத்தின் சாரத்தை வழங்கியதுகூட இக்குருகுல முறையில்தான். 

.

உ.வே.சா அவர்கள் திண்ணைப் பள்ளியில் மண்ணில் எழுதித் தமிழ் கற்றிருக்கிறார்; அந்த ஓராசிரியர் பள்ளியில் மற்ற மாணவர்களைப் போன்றே உபாத்தியாயரிடம் உதைபட்டிருக்கிறார்; பின்னர் அக்காலத்தில் புகழ்பெற்ற தமிழறிஞரான மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடமும் (அவரது இல்லத்தில்), திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடமும் (ஆதீன மடத்தில்) தமிழைக் கசடறக் கற்றிருக்கிறார். இசையையும் இதேபோல வேறு வித்தகர்களிடம் கற்றார். பின்னர் தொன்மையான தமிழ் இலக்கியங்களைத் தொகுத்துப் பதிப்பித்த மாபெரும் பணியை மேற்கொண்டபோதும், பிற மதத்தைச் சார்ந்த பெரியோரிடமும் (ஜைன மற்றும் பௌத்த மதங்கள் – சீவக சிந்தாமணி மற்றும் மணிமேகலை போன்ற இலக்கியங்களைப் பற்றி அறியும் பொருட்டு), மூதறிஞர் ராஜாஜி அவர்களிடமும்கூடப் (புத்தகங்களைச் சிறப்பாகப் பதிப்பித்தல் பற்றி) பல விஷயங்களைக் கற்றிருக்கிறார். அவரேகூடப் பல மாணவர்களின் ஆசிரியராகவும் இருந்து தமிழைக் கற்பித்திருக்கிறார். 

.

தமிழ்த்தாத்தாவைப் போன்று பல சிறந்த அறிஞர்களிடம் நேரடியாகப் பாடம் கேட்பது [அ] கற்பது என்பது இக்காலத்தில் மிக அரிதாகவே இருந்தாலும் (கர்நாடக இசை, பரதநாட்டியம், சிலம்பம், களரி போன்ற பாரம்பரியக் கலைகள் பயிலுதல் இவ்வாறுதான் இன்றும் நிகழ்கின்றது, குருகுல வாசம் இல்லாதுபோனாலும்), அவ்வாறு எதையாவது நமக்குக் கற்பித்த / அறிவுறுத்திய / தெளிவுபடுத்திய / வழிகாட்டிய அனைவருமே ‘ஆசிரியர்’ என்ற பொதுவான வரையறைக்குள் அடங்கிவிடுவார்களா என்றால், ‘நிச்சயமாக இல்லை’ என்ற ஒருமித்த குரலே எங்கும் கேட்கும் என்பது திண்ணம். எனில், நம்முடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில், ஏதாவது ஒரு வகையில், வழிகாட்டியாக அமையக் கூடியவர் யாவர்? 

.

SwamyGurus3

முதலில் ஆசிரியர். இன்றைய சமூகச் சூழலில், ஆசிரியர் என்பவர் பள்ளி மற்றும் கல்லூரியில் முறைப்படுத்தப்பட்ட கல்வியை (formal curriculum or syllabus based education) போதிப்பவர். தனிப்பட்ட முறையில் டியூஷன் எடுப்போரும், ஆன்லைனில் அல்லது ஆப் (app) மூலம் கற்பிப்போரும் ஆசிரியர்களே. இவர்கள் பாடத்திட்டம் சார்ந்த கல்வி (மொழி, கணிதம், விஞ்ஞானம், சரித்திரம்…), கலை (ஓவியம், நடனம், இசை, தற்காப்புக் கலைகள்…), திறன்கள் (மேலாண்மை, குழுத்தலைமை, மதிப்பீடு…) போன்ற எத்துறையில், எந்த நிலையில் (levels such as beginner, intermediate, advanced, expert…) கற்பித்தாலும், இவர்கள் அனைவரையும் ஆசிரியர்கள் என்றே குறிப்பிடலாம். இத்தகைய ஆசிரியர்கள் பலர் நம் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் நம்மிடம் ஒரு தாக்கத்தையோ, மாற்றத்தையோ (ஏன், பாதிப்பையோ கூட) ஏற்படுத்தியிருப்பர். 

.

மதுரையில் துவக்கப்பள்ளியில் என்னுடைய இசை ஆர்வமும், நடிப்புத்திறனும் வாய்ப்பளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. திண்டுக்கல்லில் உயர்நிலைப்பள்ளியில் என்னையும் பிற மாணவர்களையும் ‘சினைப் பன்னி‘ என்று ஓயாமல் திட்டிய (அது ஆண்கள் மட்டுமே பயிலும் பள்ளி!) தமிழாசிரியர்தான் பேச்சுப்போட்டிகளில் நான் பங்குபெற்றுப் பரிசுபெற முதன்முதலில் வழிவகுத்தார். வகுப்பில் போரே நடப்பதுபோல் பாடம் நடத்தி வியக்கவைத்த சரித்திர ஆசிரியர், சார்ட் மற்றும் மாடல்கள் தயாரிப்பில் பங்குபெற வைத்து, பின்னாளில் கல்லூரி தினங்களில் அத்திறமை பயன்பட வித்திட்டார். ஓராண்டு மட்டுமே உயர்நிலைக்கல்வி கற்ற ராமநாதபுரம் பள்ளி ஆசிரியர்கள் அனைவருமே, ஒருமித்த கருத்தோடு என்னை (புதிய மாணவன் என்று பாராமல்) ஊக்குவித்து, மாநில அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற வழிகாட்டினர். 

.

மதுரையில் மேல்நிலைப் பள்ளியில் நான் ஆர்வத்துடன் தமிழை மொழிப்பாடமாகத் (“அய்யோ, அதுல மார்க்கே வராதேடா… ஹிந்தியோ, ஃபிரெஞ்சோ எடுத்துத் தொலைக்க வேண்டியதுதானே,” என்ற உருப்படியான யோசனையை மீறி) தேர்ந்தெடுக்க, அற்புதமான ஆசிரியர்(யை!) ஒருவர் அமைந்து அந்த ஆர்வ விளக்கில் அறிவு நெய்யூற்றி அறிவொளியை அதிகரித்தார். இன்று நான் இயல்பாகத் தமிழில் எழுதுவதற்கும், பேசுவதற்கும், வகுப்பில் அவர் மாணவர்களாகிய எங்களை வைத்து நடத்திய பேச்சு, விவாதம் போன்ற – பாடத்திற்கு நேரடித் தொடர்பற்ற – நிகழ்ச்சிகள், மற்றும் எனது ஆரம்பகால எழுத்து முயற்சிகளுக்கு அளித்த ஊக்கமும் நிச்சயம் மரக்கன்றுக்கு ஊற்றப்படும் நீர்போன்று இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. 

.

1493184199316-ca698eb4-aa67-46ca-9f4f-5f7ac90b7379 (1)

சிவகாசி அருகிலுள்ள பொறியியல் கல்லூரியிலும், படிப்பைத் தாண்டிய பல விஷயங்களில் பங்குபெற்று எனது திறன்களைச் செப்பனிடவும், போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவற்றை வெளிக்காட்டவும், பரிசு மற்றும் பாராட்டு போன்ற அங்கீகாரத்தைப் பெறவும், நல்லாசிரியர்களின் உதவி இடைவிடாது எனக்குக் கிடைத்தது என்பது மிகையல்ல. ஆனால் கடைசியில் ‘சிறந்த வெளியேசெல்லும் மாணவன்‘ (Best Outgoing Student) பட்டம் கிட்டாது போய் விட (‘கிட்டதாயின் வெட்டென மற’ என்ற ஒளவையாரின் அறவுரையெல்லாம் அனுபவபூர்வமாக அறியும் வயதா கல்லூரி மாணவனின் இளமைப்பருவம்!), பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் கிடைத்தது சோகமான நகைச்சுவை!

.

பின்னர் வேலைதேடி அலைந்து திரிந்த காலத்தில் (அப்போது campus recruitment இன்றுள்ளதுபோல் எல்லாக் கல்லாரிகளிலும் கிடையாது), கணினித்துறையில் பட்டயப் படிப்பின் போது, நான் நடத்திய வினா-விடை (quiz) போட்டியே எனக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் வேலைகிடைக்க வழிவகுத்தது. அதற்கு வாய்ப்பளித்தோரும், பின்னர் உலகளாவிய பெரிய நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தபோது பயிற்சியளித்தோரும்கூட ஆசிரியர்களே. ஆனால் ஆசிரியரல்லாத கற்பிப்போரும் உள்ளனர் என்பதை எனக்கு முதன்முதலில் உணர்த்தியது நான் வேலைபார்த்த நிறுவனங்களே. 

.

IMG_0991

அத்தகையோர் யாவர் என்பதை அறியுமுன் ஒரு சிறிய இடைச்சொருகல். கல்வி தவிர்த்து, விளையாட்டு மற்றும் கலைத்துறைகளில், திறன்சார்ந்த பயிற்சியை அளிப்போர் கூட ஆசிரியர்களைப் போன்றோரே என்றாலும், துறைசார்ந்த திறமை மற்றும் அனுபவம் உடைய அவர்களைப் பயிற்றுனர் (coach) என்று குறிப்பிடுவதே முறையானது. சமீபத்தில் பூப்பந்துப் போட்டியில் உலக சாம்பியன் ஆன பி.வி.சிந்து மற்றும் மூன்றாமிடம் பெற்ற சாய் பிரணீத் ஆகியோரின் பயிற்றுனரான முன்னாள் சாம்பியன் புல்லெல்ல கோபிசந்த், சதுரங்க விளையாட்டில் சர்வதேச அளவில் விளையாடி வரும் எனது பிள்ளைக்குப் பயிற்சியளிப்பவர், எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்குத் தலைமைப் பயிற்சியாளராகவுள்ள ராகுல் டிராவிட் போன்றோர் பயிற்றுனர்களே. வெறும் பாடப்புத்தகக் கல்வி அல்லாது, திறன்சார்ந்த நேரடிப் பயிற்சியை ஆர்வலர்களுக்கு அளிப்போர் இத்தகைய வல்லுநர்கள். 

இரண்டாவது ஆசான். சுய தொழிலோ, அல்லது சம்பளம் ஈட்ட உதவும் வேலையோ, அவற்றில் நாம் ஈடுபடும் பிழைப்பு எனு‌ம் பரபரப்பான தளத்தில் நமக்கு வழிகாட்டி உதவுவோர் தனிப்பட்ட வகையான ஆசிரியர்கள். பொதுவாக நம்மை விட அதே துறையில் அதிக அனுபவம் உடையவர்களான இவர்கள், தங்களது அனுபவ அறிவைப் பகிர்வதன் மூலம் நாம் சிறப்பாகப் பணிபுரியவும், தவறுகளைத் தவிர்க்கவும், வெற்றிபெறவும் வழிகாட்டுவர். இவர்களை ஆசான் அல்லது வழிகாட்டி (mentor) என்றழைக்கலாம். தொழில் அல்லது பணிபுரியும் காலத்தின் முற்பகுதியிலேயே பிறரது வெற்றிக்கு உதவும் ஒரு ஆசான் அமையப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். இவ்வாறு அமையாதவர்கள் ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு,’ என்பதுபோல் தாங்களாகவே அடிபட்டுத் தொழில் சார்ந்த பிழைக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும் என்பது எந்தத் துறையிலும் உள்ள நிரந்தர சாபக்கேடு. எனக்கு இவ்வாறு ஒருவர் அமைந்து வழிகாட்டியதன் பயனைச் சற்று காலதாமதமாகவே நான் உணர்ந்தாலும், என்னிடம் நேரடியாக மற்றும் என்னுடன் பணிபுரிந்த பலருக்கு நான் ஆர்வத்தோடு வழிகாட்டியுள்ளேன் (இதையெல்லாம் good karma என்று credit செய்து, நம்முடைய கர்மவினையின் சுமையை ஓரளவேனும் சித்ரகுப்தர் debit செய்து குறைப்பாரெனில் நாம் அவருக்கு எப்பிறவியிலும் நன்றியுடையோராக இருப்போம்). 

SwanyKK

தொழில் துறையிலேயே இன்னொரு வகையான ஆசிரியரும் உண்டு. இவர்களுடைய பட்டமும் பயிற்றுனர் (coach) என்றே இருந்தாலும், விளையாட்டுத் துறையிலுள்ள பயிற்றுநர்களைப் போல இவர்கள் குறிப்பிட்ட துறையில் அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டிய நியதி எதுவுமில்லை. இதற்கான சான்றளிக்கும் நிறுவனங்களின் பயிற்சியை முடித்துப் பட்டம் பெற்றபின் (செலவு சற்று அதிகமே, குறிப்பாகப் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் செலுத்த வேண்டிய ஆண்டுச் சந்தா – நான் பயிற்றுனராக முறைப்படி தகுதி பெற்றிருந்தாலும், ஓய்வுபெற்றபின் இந்தக் கந்துவட்டியைச் செலுத்துவதை நிறுத்திவிட்டேன்), இவர்கள் தனித்தோ, ஒரு பயிற்சி நிறுவனம் மூலமாகவோ அல்லது ஒரு தொழில் நிறுவனத்தில் இருந்தவாறோ கூட இப்பணியைப் புரியலாம். ஐரோப்பிய தேசங்களில் பெரிய அளவிலும், அமெரிக்காவில் ஓரளவிலும், பாரதம் போன்ற ஆசிய தேசங்களில் மிகக் குறைவாகவும் இத்துறையின் பயன்பாடு உள்ளது. இத்தொழில் – ஆண்டுச் சந்தா என்ற கந்துவட்டியை வசூலிக்கும் இடைத்தரகர்கள் இல்லாமல் – விரிவடைந்தால் பல்லாயிரக்கணக்கானோர் (பயிற்சி பெறுபவர் மற்றும் பயிற்றுனர்) – பயன்பெறுவர். பிழைப்பு மற்றும் ஆன்மீகம் என்ற இரு பாதைகளிலும் பயணித்த/க்கும் என்னுடைய அனுபவத்தில், முறைப்படி பயிற்றுவித்தல் (coaching) அளிக்கும் அனுபவமானது ஆன்மீகப் பயிற்சியை (sadhana) ஒத்ததாக இருந்தது என்பது மிகையல்ல.   

MarshallG_PrakashSwamy

மூன்றாவதாக குரு. வாழ்வில் எதையும் ‘உள்ளது உள்ளபடி’ காண்பது எப்படி என்று பயிற்றுவிக்கும் இந்த இருள்நீக்கியைப் பற்றி “ஆசிரியர், ஆசான், குரு – பகுதி 2“ல் காண்போம்.

.

Be Joyful & Spread the Cheer 🙂

~ஸ்வாமி | @PrakashSwamy

Swamy Blogs |Uyirmei | Swamystery | Been there, Seen that | SwamyRay | Swamyem | Swamyverse | SwamyView | Swamygraphy

Connect with Swamy | Twitter | Facebook | Quora | LinkedIn | Pinterest | Tumblr | Indiblogger

 

அருட்குறள் ~ ஞானப்பால் #100

அருட்குறள் ~ ஞானப்பால் #100
மழித்தலும் வளர்த்தலும் துறவன்று தன்னை

அழித்தலும் அடங்கலும் துறவு.

.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~
இல்லறத்தில் இருக்கும் மக்கள் ‘ஊரோடு ஒத்துவாழ்‘ என்றவாறு சமூகச் சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களது தோற்றத்தை வைத்துக்கொள்வது இயல்பு. தோற்றப் பொலிவிற்காகவும், பிரபலங்களின் ‘இன்ஸ்டகிராம்‘ தோற்றத்தைப் போன்றே தன்னுடைய தோற்றமும் இருப்பதற்காகவும், பெருஞ்செலவு செய்வதை முக்கியமானதாகக் கருதுவோர் பலர் இங்குள்ளனர்.

.

ஆனால், துறவறம் என்றவுடன், சிகையை முழுவதும் மழித்தல் அல்லது நீளமாக வளர்த்தல் என்ற இருவித நிலைகளில் ஏதாவது ஒன்றை மேற்கொள்வோரே துறவிகள் என்ற அர்த்தமற்ற கண்ணோட்டம் மக்களிடையே இருக்கின்றது. இதுவும் பிறரிடமிருந்து சேகரித்த காரண அறிவால் விளையும் மடமையே.

.

உடலானது அழியும் தன்மையுடையது. உயிரானது ஒவ்வொரு பிறவியிலும் ஒரு உடலைப் பெற்று, வளர்ந்து, மடிகையில் அவ்வடலை, பயன்படுத்திய ஆடையைக் களைவதுபோல உதறிவிட்டு, அடுத்த பிறவிக்கான புதிய உடலைத்தேடி, கர்ப்பவதியின் கருவறையுள் சென்று சேர்கின்றது. மறுபடியும் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்ற இந்தச் சுழற்சி, கர்மவினையின் சுமை குறைந்து மறையும் வரை தொடரும். எனவே, குருவின் அருளால் உயிர்மெய் அறியும் ஆன்மீகத் தேடலிலுள்ளோர், இப்பிறவியில் தம்முடைய அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் உடலின், அதாவது தோற்றத்தின் நிலையாமையை உணர்ந்திருத்தல் அவசியமான ஒன்று.
.
துறவிகள் ஆன்மீகத் தேடலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மனிதர்கள். இதன்காரணமாக, பொருளாதாரம் சார்ந்த சமூக வாழ்க்கைக்கு முக்கியமாகக் கருதப்படும் பலவற்றை – தோற்றப் பொலிவு உட்பட – அவர்கள் ஒதுக்கிவிட்டு, ஞானோதயம் அடைந்து, வீடுபேறு என்ற இறுதி விடுதலையாகிய முக்தியைப் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோர். எனவே புறத்தோற்றத்தில் அவர்கள் சிகையை மழித்தலையோ, நீளமாய் வளர்த்தலையோ செய்வது, அத்தோற்றம் தமக்கு முக்கியமானது அல்ல என்று பிறருக்குக் குறிப்பாலுணர்த்தவே. இது புறத்தோற்றத்தைப் போற்றும் சமூக அமைப்பிலிருந்து ஓரளவேனும் ஒதுங்கியிருக்கும்பொருட்டு, விழிப்புணர்வுடன் செய்யப்படும் செயலே. அவர்களும் சாதாரண மனிதர்களைப் போன்ற தோற்றத்திலேயே இருந்தால், பின்னர் ‘பிக் பாஸ்‘ போன்ற மொத்தச் சமூகத்தையும் சிந்தனைச் செம்மல்களாக்கிய சரித்திர நிகழ்வுகளின் அலசலிலும், ‘ஆவின் பால் விலையுயர்வு நியாயமானதா?‘ போன்ற தர்க்கவாதங்களிலும் அவர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்து, ‘ஊரோடு ஒத்துவாழ‘ வைத்துவிடுவர் ‘அறியாமையே ஆனந்தம்‘ என்று திரியும் அறிவிலிகள்.
.

உண்மையான துறவு என்பது சிகையை மழித்தல், நீள வளர்த்தல் போன்ற புறத்தன்மை பற்றியதல்ல. அது தன்னை அழித்தலும், தனக்குள் அடங்கலுமாகிய அகத்தன்மை பற்றியது.

.

தன்னை அழித்தல் என்பது ‘தான் ஒரு தனிப்பட்ட பிறவி,’ என்ற நம்பிக்கைக்கு ஆதாரமான அகந்தையை அழித்தல். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் முதலாவதன் பிடியிலிருந்து விடுபடுதல். அறியாமையால் விளையும் இருமையை விடுத்து, படைப்பானது படைத்தவனுடன் ஒருமையை அடைய, தன்னை அழித்தல் அத்தியாவசியமானது. குருவானவர் இதைத் தனது சீடர்கள் அனைவரிடத்திலும் இடைவிடாது செய்து வருவார்.

.

தனக்குள் அடங்கல் என்பது, திருத்தலங்களைத் தேடிச் சென்று, திருக்கோயில்தோறும் கண்டு தொழுத சகுண பிரம்மமாகிய இறைவன், தன்னுள்ளேயே நிர்குண பிரம்மமாக ஒளிர்வதை நேரடி அனுபவம் மூலம் அறிந்து, இருமை ஒழிந்த சமாதியில் நிலைபெற்றுவிடுதல். இவ்வாறு உயிர்மெய் அறிந்து தம்முள்ளே பேரானந்தத்தில் திளைத்திருந்தாலும், இன்னமும் உடலாகிய புறத்தோற்றத்தை உதிர்த்து விடாது, நம்மிடையே இருப்போரை ஜீவன் முக்தர் என்றும், நாமும் அந்நிலையை அடைய வழிகாட்டுவோரை குரு என்றும் போற்றி வழிபடுகின்றோம்.

.

அகஸ்திய முனி, ஆதிசங்கரர், ஷீரடி சாய்பாபா, பகவான் ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமஹம்ச யோகானந்தர், பட்டினத்தார், அருணகிரிநாதர், ஸ்வாமி ராமா, ஸ்வாமி சிவானந்தர், தபோவன் மஹராஜ், லாஹிரி மஹாஸாயா, வள்ளலார், நிசர்கதத்த மஹராஜ், நாராயண குரு, நீம்கரோலி பாபா, அல்லமா பிரபு, ஸ்வாமி விவேகானந்தர், தேவி மாயம்மா, அரவிந்தர், ஸ்வாமி சின்மயானந்தர், ஓஷோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி, காஞ்சி பரமாச்சாரியார், யோகி ராம்சுரத்குமார், நன்னகாரு, சத்குரு, ஸ்ரீ எம், ஓம் ஸ்வாமி போன்ற எத்தனையோ ஜீவன்முக்தர்கள் மற்றும் குருமார்கள் உள்ள தொன்மையான கலாச்சாரம் நம்முடையது. இவர்களில் யாருமே, சிகையை மழித்தல் மற்றும் வளர்த்தலால் துறவிகளாகவில்லை. தன்னை அழித்தல் மற்றும் தனக்குள் அடங்கலால் துறவறத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தியுள்ளனர். அவர்களை வணங்கி, அவர்தம் வழிநடந்து, நாமும் உள்ளொளி அறிந்து உய்வோம். ஷம்போ!

~ஸ்வாமி | @PrakashSwamy

முதலீடு!


உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் எதிர்வினைச் செயல்கள் உயர் ரத்த அழுத்தம், தீராத கவலை, மன அழுத்தம் போன்ற ஆரோக்கியக் குறைபாடுகளை விரும்புவோருக்குச் சிறந்த முதலீடாகும்!

~ஸ்வாமி | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #93

அருட்குறள் ~ ஞானப்பால் #93
பற்றேது மில்லாது பசுபதிபொற் பதஞ்சேர

சற்றேயுள் ளசையாது நில்.

குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~
படைப்பு, அதாவது ஏதோ ஒரு படைப்பாக இப்பிறவியில் உள்ள உயிரானது பசு. படைத்தவன், அதாவது படைப்பிலுள்ள அனைத்தையும் உருவாக்கி, காத்தருளி, விடுதலை அளிப்பவர் பதி. எல்லாம் வல்ல இறையான ஈசனைப் பசுபதி என்று துதித்து வணங்குவது இதனாலேயே என்று அறிக.

.

பரம்பொருளான பசுபதியின் பொற்பாதத்தில் முழுமையாகச் சரணடைவதே, முக்தி அடையச் சிறந்த வழியாகும். முழுமையான சரணாகதி நிகழ வேண்டுமென்றால் பசுவாகிய படைப்பு, தனது பற்றுக்களை விட்டொழிக்க வேண்டும். உற்றார், செல்வம், உணவு, புகழ், இனம், மதம், மொழி, செல்வாக்கு போன்ற பற்றுக்கள் நம்மைக் கட்டியுள்ள தளைகளே. அவற்றால் கட்டுண்டு இருப்போர் பிறப்பு-இறப்பு என்ற சுழலிலிருந்து முற்றிலுமாக விடுதலை பெறும் வீடுபேற்றை ஈசனிடம் வேண்டாமல், பிழைப்பு சார்ந்த உலகில் சிறப்பாக வாழ்வதற்கான வரங்களைக் கேட்டுக் கொண்டிருப்பர்.

.

பிழைப்பே வாழ்வு என்பது கற்ற மற்றும் பெற்ற அறிவால் விளையும் அறியாமையால் ஏற்படும் நம்பிக்கை. இந்த மாயைத்திரை விலகி மகேசனை அறிய, ஆன்மீக சாதகர் குரு அளித்த பயிற்சிகளை முறையாகச் செய்து, அசைவின்றி அமர்ந்து*, படைத்தவனாகிய பதியே (ஈசன்) படைப்பாகிய பசுவினுள் (நாம் உட்படப் படைப்பிலுள்ள உயிர்கள் அனைத்தும்) உயிர்ச்சக்தியாக இயக்குவதை நேரடி அனுபவமாகக் கண்டுணர வேண்டும். இதுவே உயிர்மெய் அறிதல் எனும் ஞானோதயம் ஆகும். ஈசனது உயிர்சக்தி இயக்கமே, ஹிருதயத்தில் நிகழும் தாண்டவமாகும். தான் என்ற ஆணவம் அடங்கி, எக்கணமும் எம்பெருமானின் களிநடனத்தைத் தன்னுள்ளேயே காணும் இப்பேரானந்த நிலையை அடையும் வழியே யோகம்.

.

*பல ஆசனங்களை பயின்று பயிற்சி செய்து வந்தாலும், அவற்றில் ஏதேனும் ஒன்றில் சாதகர் அசையாது அமரும் தன்மை தானாகவே நிகழும். இதனையே பதஞ்சலி மகரிஷி “சுகம் ஸ்திரம் ஆசனம்” என்று யோகா சூத்திரத்தில் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.
.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
A being that’s present in creation, in any given lifetime, is known as Pashu. The Creator, who creates all life, nurtures and liberates them is Pathi. Lord Shiva is worshipped as Pashupathi, indicating he’s the lord of all creation.
.
Surrendering unconditionally at the golden feet of Lord Pashupathi is a wonderful way to attain mukti (ultimate liberation from lifecycle). For unconditional surrender to happen, the Pashu aka creation has to let go of all attachments. Family, wealth, food, fame, race, religion, language, power, etc. are all attachments that bind us to the existence of commercial survival. Those who are bound by such attachments will seek boons from Lord Shiva for better quality of living on the survival plane of existence, instead of seeking the ultimate liberation from the repetitive birth-death spiral.
.
Believing that survival is life is ignorance caused by the intellect, which is nothing but an accumulation of learned and acquired knowledge. In order for this curtain of maya (illusion) to be removed and be receptive to the Grace of MahEswara, a seeker must diligently practice the sadhana offered by the Guru (Realised Master), sit still* and realise the Truth that it’s the Pathi (Eswara / Creator) that’s active within each and every one of the Pashus (us / beings in creation) as Life energy. This realisation, which will be a direct perception of reality, within oneself and everywhere, is known as self-realisation aka enlightenment. The active presence of Eswara in the hridhayam (spiritual heart) of a being is the ThANdava (dance of Life) that happens perennially, but remains unnoticed by most beings. When one’s ego is eradicated, a being can perceive / experience the ThANdava within oneself, every living moment. The path to attain this eternal state of bliss is Yoga.
.
*Even as a seeker learns and practices many an Asana, in one of them s/he will naturally attain stillness, i.e. remain seated for a duration sans any movement. This is what is indicated by Pathanjali Maharishi in his Yoga Sutras as “Sukham Sthiram Asanam.”

.

~Swamy | @PrakashSwamy

அருட்குறள் ~ ஞானப்பால் #92

அருட்குறள் ~ ஞானப்பால் #92
காணாத காலத்தைக் கண்டலறிப் பணியுமிறை

தானாகத் தன்னுள் ளறி.

.
குறள் விளக்கம்
~~~~~~~~~~~~~~~
ஒருவர் காண முடியாத, அதாவது அனுபவத்தில் உணர முடியாத காலம் என்பது இந்தப் பிறவியில் அவர் எடுத்த உருவமானது (இவர் இன்னார் என்று அடையாளம் காணும் உடல்) மறைந்த பின்னர் உள்ள காலம். தம்மால் அனுபவிக்க வாய்ப்பே இல்லாத ஒன்றை எண்ணி அஞ்சிப் பதைத்தே பலரும் இறைவனை வழிபடுகின்றனர். மரணத்தைத் தவிர்க்கவும், ஒத்திப்போடவும் வரமும் வேண்டுகின்றனர். இது அறியாமையால் விளையும் மடமை.

.

நாம் வாழும் ஒவ்வொரு கணமும் நமது அனுபவத்தில் உள்ள உண்மை. அந்த ஒவ்வொரு கணத்திலும் நமது அறிவையும், திறனையும் பயன்படுத்தி நாம் பயனுள்ள, பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்காத செயல்களைப் புரிவது என்பது, நமக்குள்ள வாய்ப்பு. இவ்வுண்மையை உணர்ந்து, படைப்பிலுள்ள எல்லா உயிர்களின் உள்ளிருந்து இயக்கும் உயிர்சக்தியாக உள்ள படைத்தவனைப் பணிந்து, பயனுள்ள செயல்களைப் புரியும் வாய்ப்பை அளித்த அவனுடைய அளப்பரிய பெருங்கருணைக்கு நன்றியுணர்வுடன் நாம் ஒவ்வொரு கணத்திலும் வாழ்வதே ஆனந்தமான வாழ்விற்கு வழியாகும். இதன்மூலம் எந்த மனிதரும் இறைவனின் இருப்பை எங்கும், எதிலும் அனுபவபூர்வமாக உணர்ந்து உய்ய முடியும்.

.

.

KuRaL explanation
~~~~~~~~~~~~~~~~~~
If there’s a time that’s beyond the boundary of experience for humans, it would be the time after the body (the physical form that’s used as identity of an individual) perishes. Yet, most humans dread this time, which they cannot experience, and worship God fervently, seeking boons to either prevent the inevitable or at least postpone it. This is madness caused by ignorance.
.
This moment, i.e. the present, is a living reality for any living being. In every living moment, effectively utilising our intelligence and skills, we can choose to perform purposeful actions that don’t cause harm to any other being (not just humans). Realising this truth, surrendering to the divine that shines within every being in creation and keeps them alive in the form of life energy, remaining in gratitude for the opportunity to perform purposeful actions, is the way to live joyfully. Any creation that lives this way shall experience the presence of the Creator in all creation, including oneself, and attain liberation (mukti).

.

~Swamy | @PrakashSwamy

Powered by WordPress.com.

Up ↑